நியூசிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் டெவோன் கான்வே கையில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக உலக கோப்பை பைனல் போட்டியில் ஆஸ்திரேலியா எதிரான ஆட்டத்தில் இருந்து விலகியுள்ளார். மேலும் இந்திய அணிக்கு எதிரான சுற்றுப்பயணத்தில் இருந்து விலகியுள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தின் போது டெவோன் கான்வேவிற்கு கையில் பலத்த காயம் ஏற்பட்டது.
ALSO READ UAE-ல் பாகிஸ்தானின் சாதனையை துவம்சம் செய்த ஆஸ்திரேலியா!
இந்த சமயத்தில் நியூசிலாந்து அணிக்கு இது மிகப் பெரிய பின்னடைவு. டெவோன் கான்வே நியூசிலாந்து அணிக்காக விளையாடுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். விரைவில் அவர் குணமடைய நாங்கள் உறுதுணையாக இருப்போம். கான்வே முக்கியமான நேரத்தில் அணிக்கு பக்கபலமாக இருந்துள்ளார். போதிய நாட்கள் இல்லாத காரணத்தினால் அவருக்கு பதிலாக வேறு ஒருவரை அணியில் சேர்க்க இயலவில்லை. இந்திய அணிக்கு எதிரான போட்டிகளில் கான்வேக்கு பதிலாக வேறு ஒருவர் அணியில் இடம் பெறுவார் என்று நியூசிலாந்து அணியின் பயிற்சியாளர் கூறியுள்ளார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் 38 பந்துகளில் 46 ரன்கள் அடித்து அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார் கான்வே. உலக கோப்பை போட்டிகள் முடிந்ததும் இந்தியாவுக்கு எதிராக நடக்கும் போட்டிகளில் அதே அணியுடன் நியூசிலாந்து அணி களமிறங்குகிறது. உலக கோப்பை போட்டிகள் முடிந்த மூன்றாவது நாளில் இந்தியாவுக்கு எதிரான டி20 போட்டி தொடங்குகிறது. மொத்தமாக 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் நியூசிலாந்து அணி விளையாடுகிறது.
ALSO READ 2014ல் இன்று! ஒருநாள் போட்டியில் உலக சாதனை படைத்த ரோகித் சர்மா!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR