WTC2021: நியூசிலாந்து இந்தியாவை 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது
ரிசர்வ் நாளில் நியூசிலாந்தின் அணி இந்தியாவை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றது.
சவுத்தாம்ப்டனில் நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை எட்டு விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து வென்றது. ரிசர்வ் நாளில் நியூசிலாந்தின் அணி இந்தியாவை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றது.
நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் எடுத்தார். ரோஸ் டெய்லர் 43 ரன்கள் எடுத்தார்.
ஐ.சி.சி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டி இந்தியாவிற்கும் நியூசிலாந்திற்கும் இடையே சவுத்தாம்ப்டனில் உள்ள ஏஜிஸ் பவுல் மைதானத்தில் நடைபெற்றது. நியூசிலாந்து அணி இந்தியாவை வீழ்த்தி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றது.
Also Read | WTC Final: இந்தியா-நியூசிலாந்து அணிகள் ஏன் 6வது நாளாக விளையாடுகின்றன? தெரியுமா?
வெற்றி பெற 139 ரன்கள் என்ற இலக்குடன் களம் இறங்கிய நியூசிலாந்து அணி, இரண்டாவது இன்னிங்சில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து இலக்கை எட்டியது. 7 விக்கெட்டுகளை பறித்து 61 ரன்கள் எடுத்த கைல் ஜேமீசன் போட்டியின் ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார்.
இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இரண்டு ஆண்டு காலமாக விளையாடப்பட்டு அணிகளுக்கு புள்ளிகள் அளிக்கப்பட்டு வந்தன. நியூசிலாந்திற்கும் இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் வெ ந்ற நியூசிலாந்து அணிக்கு 1.6 மில்லியன் அமெரிக்க டாலர் பரிசுத் தொகை கிடைத்தது.
இந்திய அணி, ஒன்பது அணிகள் கொண்ட போட்டியில் இரண்டாவது இடத்தைப் பிடித்ததற்காக 800,000 அமெரிக்க டாலர்களை பரிசுத்தொகையாகப் பெற்றது.
முன்னதாக இந்தியா இரண்டாவது இன்னிங்ஸில் 170 ரன்கள் எடுத்தது. ரிஷப் பந்த் 41 ரன்கள் எடுத்தார். முதல் இன்னிங்சில் நியூசிலாந்து 249 ரன்கள் எடுத்திருந்தது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 217 ரன்கள் எடுத்திருந்தது.
Also Read | WTC Final,Ind vs NZ: வெற்றிபெறும் அணிக்கு கிடைக்கப்போகும் பரிசுத்தொகை எவ்வளவு?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR