World Test Championship Final: உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் நாள் வந்துவிட்டது. கிரிக்கெட்டின் பல வடிவங்களில் மிகவும் நேர்த்தியான வடிவமாக கருதப்படும் டெஸ்ட் போட்டிகளுக்கான முதல் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டி சவுத்தாம்ப்டனில் உள்ள ஏகாஸ் பவுலில் இன்று துவங்கவுள்ளது.
இந்த முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிபின் இறுதிப்போட்டியில் (WTC Final) இந்திய அணியிம் நியூசிலாந்து அணியும் மோதவுள்ளன. இந்த போட்டியில் இந்திய அணி தன் முழு திறனுடன் விளையாடும் என்றும் தனது பலத்தை நிரூபிக்கும் என்றும் நம்பிக்கையுடன் கூறுகிறார் பி.சி.சி.ஐ தலைவரும் இந்திய அணியின் முன்னாள் கேடப்டனுமான சவுரவ் கங்குலி.
விராட் கோலி தலைமையிலான அணி அருமையான ஃபார்மில் இருப்பதாகவும் கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த அணி மேற்கொண்ட விடா முயற்சியின் விளைவால் முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளின் இறுதிப்போட்டியில் விளையாடும் தகுதியை பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார்.
"இது நம் அனைவருக்கும் ஒரு பெரிய தருணம். இந்த நிலைக்கு வருவதற்கு அவர்கள் இரண்டு ஆண்டுகளாக மிகவும் கடினமாக உழைத்துள்ளார்கள். அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள். அவர்கள் முழு உற்சாகத்துடன் விளையாடுவார்கள் என்று நான் நம்புகிறேன்" என்று கங்குலி ANI இடம் கூறினார்.
ALSO READ: WTC Final: மகுடம் யாருக்கு; இந்தியா vs நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை
"நமது அணியில் நல்ல சமநிலை உள்ளது. ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது நீங்கள் பார்த்ததுபோல, இந்த அணியின் கடைசி பேட்ஸ்மேனால் கூட நன்றாக பேட்டிங் செய்ய முடியும். வீரர்கள் தங்கள் முழு திறனையும் பயன்படுத்தி விளையாடுவார்கள். இந்த நிலைக்கு வர அனைத்து வீரர்களும் பல ஆண்டுகளாக அற்புதமான சிறப்பான விளையாட்டை வெளிக்காட்டியுள்ளார்கள்" என்று சவுரவ் கங்குலி (Sourav Ganguly) தெரிவித்தார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டியை தனக்கு மறக்கமுடியாத ஒரு போட்டியாக மாற்ற கோலி முழு முயற்சியையும் எடுப்பார் என்று கங்குலி உறுதியாக நம்புகிறார்.
"இது அனைவருக்கும் ஒரு நல்ல வாய்ப்பு. விராட் கோலி (Virat Kohli) ஒரு சிறந்த வீரர். இந்த நிகழ்வை மிகவும் மறக்கமுடியாத ஒன்றாக மாற்ற அவர் முயல்வார் என்று நான் நம்புகிறேன்" என்று கங்குலி கூறினார்.
நான்கு வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் ஒரு சுழற்பந்து வீச்சாளர் அல்லது மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்கள், இதில் எந்த உத்தியை இந்தியா கையாள வேண்டும் என்பது குறித்து நிறைய பேச்சுக்கள் நடந்துள்ளன. இஷாந்த் சர்மா மற்றும் முகமது சிராஜ் இடையே ஒருவரைத் தேர்ந்தெடுப்பதிலும் அதிக குழப்பம் இருந்தது. ஆடுகளத்தின் சூழல், பிட்ச் ஆகியவற்றை பார்த்து அதற்கேற்ற படி, அணியின் பயிற்சியாளரும் கேப்டனும் சேர்ந்து ஒரு நல்ல முடிவை எடுப்பார்கள் என்பது உறுதி என கங்குலி தெரிவித்தார்.
"இதுபற்றி இங்கிருந்து கருத்து தெரிவிப்பது எனக்கு கடினமாக இருக்கும். கேப்டனும் பயிற்சியாளரும் நாளை காலை பிட்ச் மற்றும் அங்குள்ள நிலைமைகளைப் பார்த்து ஒரு நல்ல முடிவை எடுப்பார்கள் என்று நான் நம்புகிறேன்," என்று அவர் மேலும் கூறினார்.
மிகவும் ஆவலாக எதிர்பார்க்கப்படும் இந்தியாவிற்கும் நியூசிலாந்திற்கும் இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் வெல்லும் அணிக்கு 1.6 மில்லியன் அமெரிக்க டாலர் பரிசுத் தொகையாக கிடைக்கும். தோல்வியைத் தழுவும் அணி, ஒன்பது அணிகள் கொண்ட போட்டியில் இரண்டாவது இடத்தைப் பிடித்ததற்காக 800,000 அமெரிக்க டாலர்களை பரிசுத்தொகையாகப் பெறும். இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இரண்டு ஆண்டு காலமாக விளையாடப்பட்டு அணிகளுக்கு புள்ளிகள் அளிக்கப்பட்டு வந்தன.
முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டியில் எந்த அணி வாகை சூடப்போகிறது என்பதைக் காண உலக கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள்.
இரு அணிகளிலும் ஆடவுள்ள வீரர்களின் விவரம் பின்வருமாறு:
இந்தியா அணி: ரோகித் சர்மா, சுப்மான் கில், புஜாரா, விராட் கோலி (கேப்டன்), அஜிங்யா ரஹானே, ரிஷாப் பண்ட், அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, பும்ரா, இஷாந்த் ஷர்மா.
நியூசிலாந்து அணி: டிவான் கான்வே, டாம் லாதம், கேன் வில்லியம்சன் (கேப்டன்), ராஸ் டெய்லர், ஹென்றி நிகோல்ஸ் அல்லது வில் யங், வாட்லிங், கைல் ஜாமிசன் அல்லது மேட் ஹென்றி, அஜாஸ் பட்டேல், டிரென்ட் பவுல்ட், டிம் சவுதி, நீல் வாக்னெர்.
ALSO READ: இந்த 3 New Zealand வீரர்கள் WTC இறுதிப் போட்டியில் இந்தியாவை அச்சுறுத்தலாம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR