‘ஆமா நான் மென்ட்டலி வீக்கா இருக்கேன்’ - உண்மையை உடைத்த கோலி; குவியும் பாராட்டு
நான் மனரீதியாக பலவீனமாக இருக்கிறேன் என்பதை ஒத்துக்கொள்வதில் நான் வெட்கப்படவில்லை என விராட் கோலி கூறியுள்ளார்.
இந்தியாவின் ரன் மெஷின் என அழைக்கப்படுபவர் விராட் கோலி. அவரது பேட்டிங்கையும், கிரிக்கெட்டை அணுகும் விதத்தையும் பார்த்த பலர் உலக கிரிக்கெட்டை அவர் ஆளப்போகிறார் என ஆரூடம் கூறினார். அதற்கேற்றார் போல்தான் கோலியின் செயல்பாடும் இருந்தது. ஆனால், கடந்த சில வருடங்களாக அவர் கடுமையான ஃபார்ம் அவுட்டில் இருக்கிறார். சதங்களில் சதம் அடித்த சச்சினின் சாதனையை முறியடிப்பார் கோலி என உலக கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்திருக்க, அவரோ சதமடித்து மூன்று வருடங்கள் ஆகிவிட்டன. இதனால் அவர் மீண்டும் எப்போது ஃபார்முக்கு திரும்புவார் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
நாளை ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தானை இந்தியா எதிர்கொள்ளவிருக்கிறது. விராட் கோலி அணிக்கு திரும்பியிருக்கிறார். எனவே தனது ஃபார்மை நாளைய போட்டியில் மீட்டெடுப்பார் என பலரும் எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.
மேலும் படிக்க | ஆசியக்கோப்பையில் இந்திய அணியை அச்சுறுத்தும் அணிகள்
இந்நிலையில்,ஸ்டார் ஸ்போர்ட்ஸில் நடந்த 'விராட் ஹார்ட் டூ ஹார்ட்' நிகழ்ச்சியில் பேசிய விராட் கோலி, “நான் மனதளவில் பலவீனமானவனாக உணர்கிறேன் என்பதை ஒத்துக்கொள்வதில் எனக்கு எந்த வெட்கமும் இல்லை. கடந்த 10 ஆண்டுகளில் முதல் முறையாக, நான் ஒரு மாதமாக எனது பேட்டை தொடவில்லை. சமீபத்தில் எனது பலத்தை போலியாக மாற்ற முயற்சிக்கிறேன் என்பதை உணர்ந்தேன். இல்லை, உன்னிடம் பலம் இருக்கிறது என்று என்னை நானே என்னை சமாதானப்படுத்திக் கொண்டேன். ஆனால் இயக்கத்தை நிறுத்தும்படி என்னுடைய உடல் கூறியது.
ஓய்வெடுத்து இச்சூழலில் இருந்து வெளியே வா என என்னுடைய மூளை சொன்னது.இது மிகவும் சாதாரணமாக உணரக்கூடிய விஷயம்தான். ஆனால், நாம் இதனை பொதுவெளியில் சொல்ல தயக்கப்படுகிறோம். மனரீதியாக பலவீனப்பட்டு இருப்பதை பார்க்க நாம் ஒருபோதும் விரும்புவதில்லை. பலவீனமாக இருப்பதை ஒத்துக்கொள்வதைவிட 'வலிமையானவர்' என்று போலியாகக் காட்டிக்கொள்வது மிகவும் மோசமானது.நான் மனதளவில் மிகவும் வலிமையான ஒருவனாக பார்க்கப்படுகிறேன். ஆனால் ஒரு வரம்பு உண்டு. அந்த வரம்பை நீங்கள் அங்கீகரிக்க வேண்டும், இல்லையெனில் அது உங்களுக்கு ஆரோக்கியமற்றதாகிவிடும்.
களத்தில் எப்போதும் எப்படி சுறுசுறுப்பாக இருக்கிறீர்கள் என பலர் கேட்டிருக்கிறார்கள். நான் கிரிக்கெட்டை காதலிக்கிறேன். விளையாட முழு ஆர்வத்துடன் இருக்கிறேன். களத்தில் இருக்கும்போது ஒவ்வொரு நொடியிலும் அணிக்காக எதாவது செய்ய வேண்டும் என விரும்புகிறேன். இதனால்தான், சுறுசுறுப்பாக இருக்கிறேன் என அவர்களிடம் கூறியிருக்கிறேன். சிறப்பாக விளையடுவதற்கான தயாரிப்பில் ஈடுபடுகிறேன். ஆனால், அதற்கான தீவிரத்தை என்னால் இயற்கையாக கொண்டுவர முடியவில்லை. என்னை உந்தி தள்ள வேண்டியிருக்கிறது” என்றார்.
தற்போது விராட் கோலியின் இந்தப் பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. மேலும், மனரீதியான நெருக்கடிக்கு ஒருவர் ஆளாகும்போது அதை பொதுவெளியில் சொல்வதற்கான தயக்கத்தை சுற்றியுள்ளவர்கள்தான் உடைக்க வேண்டும். இந்த விஷயம் நீண்ட நாள்கள் பேசப்படாமல் இருந்தது.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மேக்ஸ்வெல்கூட மன அழுத்தம் என்று கூறி விடுப்பு எடுத்து சென்றார். அப்படிப்பட்ட ஒரு தீவிரமான மன அழுத்தம் தொடர்பான விஷயங்களை இந்தியாவில் எந்த பிரபலமும் பெரிதாக பேசாத சூழலில் விராட் கோலி பேசியிருக்கிறார் எனவும் அவருக்கு பாராட்டு தெரிவித்துவருகின்றனர் நெட்டிசன்ஸ்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ