சென்னை: மூன்று சர்வதேச வடிவங்களிலும் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த நடராஜன், தற்போது நெருக்கடியான தருணத்தில் இருக்கிறார். இது அவரது ரசிகர்களுக்கு பெரும் சோகத்தை அளித்துள்ளது. விரைவில் மீண்டு இந்திய அணிக்கு திரும்ப வேண்டும் என அனைவரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர். மேலும் நடராஜனின் உடற்தகுதி குறித்து அணி நிர்வாகத்தால் மிகவும் உன்னிப்பாகக் கண்காணிக்கப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

விஜய் ஹசாரே கோப்பைக்கான 20 பேர் கொண்ட அணியை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் (டிஎன்சிஏ) நேற்று (செவ்வாய்க்கிழமை) அறிவித்துள்ளது. அந்த பட்டியலில் விக்கெட் கீப்பர் - மேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திக் மற்றும் ஆஃப் ஸ்பின்னர் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் மாநில அணிக்கான பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.


காயங்கள் காரணமாக நீண்ட இடைவெளிக்குப் பிறகு SMAT 2021-22க்குத் திரும்பிய இடது கை வேகப்பந்து வீச்சாளர் டி நடராஜன் (T Natarajan), விஜய் ஹசாரே டிராபிக்கான (Vijay Hazare Trophy) தமிழக அணியில் சேர்க்கப்படவில்லை.


ALSO READ | நடராஜனுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த யோகி பாபு; புகைப்படங்கள் வைரல்


கர்நாடகாவுக்கு எதிரான சையது முஷ்டாக் அலி கோப்பைக்கான போட்டியில் பங்கேற்ற தமிழக இடது கை வேகப்பந்து வீச்சாளர் டி.நடராஜன், முழங்கால் வலியால் பாதிக்கப்பட்டு உள்ளார் எனக் கூறப்படுகிறது. மேலும் சையத் முஷ்டாக் அலி கோப்பையில் சரியாக பந்து வீசவில்லை எனவும் ஒரு தரப்பினர் கூறுகின்றனர். அவர் தமிழக அணியில் இடம்பெறாமல் போனதற்கு சரியான காரணம் தெரியாமல் அவரது ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.


காயம் காரணமாக சையத் முஷ்டாக் அலி டிராபி (Syed Mushtaq Ali Trophy) போட்டியை தவறவிட்ட கார்த்திக், தற்போது விஜய் ஹசாரே டிராபிக்கான அணியில் இடம் பெற்றுள்ளார். அதே நேரத்தில் வாஷிங்டன் சுந்தரருக்கு விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவரும்  விளையாடவில்லை. மேலும் இங்கிலாந்து டெஸ்ட் தொடர் மற்றும் ஐபிஎல் 2021 இன் இரண்டாவது கட்டத்திலும் அவர் பங்கேற்கவில்லை என்பது குறுப்பிடத்தக்கது. 


ALSO READ |  தல தோனி அளித்த tips என் எதிர்காலத்தையே மாற்றியது: உருகும் நடராஜன்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR