பல நாள் புறக்கணிப்பிற்கு பின் ஓய்வு பெற்றார் யுவராஜ் சிங்!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டர் யுவராஜ் சிங், சர்வதேச போட்டிகளில் இருந்து விடைப்பெறுவதாக அறிவித்துள்ளார்!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டர் யுவராஜ் சிங், சர்வதேச போட்டிகளில் இருந்து விடைப்பெறுவதாக அறிவித்துள்ளார்!
இந்திய அணியின் முன்னணி மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக திகழ்ந்த யுவராஜ் சிங், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிக்கையில் கண்களில் கண்ணீர் மல்கியது. மேலும் இதுநாள் வரையில் தன் மீதான நம்பிக்கையினை அவர் இழந்தது இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய அணிக்காக இவர் தன் வியர்வையை ரத்தமாக கொடுத்து போட்டிகளில் விளையாடி இருக்கிறார். இங்கிலாந்துக்கு எதிராக 6 சிக்ஸ் அடித்தது தொடங்கி உலகக் கோப்பை 2011 போட்டியை வென்றது வரை இவர் தொடாத சாதனையே கிடையாது.
2007 மற்றும் 2011-ம் ஆண்டுகளில் நடைபெற்ற 20 ஓவர் மற்றும் 50 ஓவர் உலகக்கோப்பையை இந்தியா வெல்ல காரணமாக இருந்த யுவராஜ் சிங் தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ளது இந்திய கிரிக்கெட் ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
உலக கோப்பை வென்று சில மாதங்களில் இவருக்கு புற்றுநோய் இருப்பது தெரியவந்தது. இதனால் கிரிக்கெட் விளையாடுவதில் இருந்து சிறிய இடைவெளி எடுத்துக்கொண்டார். ஆனால் இந்த இடைவெளி இவரது கிரிக்கெட் வாழ்வில் பெரிய இடைவெளியை உண்டாக்கி விட்டது.
புற்றுநோயில் இருந்து மீண்டு கிரிக்கெட் அணிக்கு திரும்பிய யுவராஜ் சிங்கால் அதன் பின்னர் இந்திய கிரிக்கெட் அணியில் நிரந்தர இடம் பிடிக்க இயலவில்லை. சமீபத்தில் தான் விளையாடிய IPL போட்டிகளிலும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் IPL அணிகளாலும் புறக்கணிக்கப்பட்டார். அதோடு இந்திய அணியிலும் இவர் புறக்கணிக்கப்பட்டார். இந்திய அணி மட்டும் இல்லாமல் ரஞ்சி அணியிலும் கூட அவருக்கு சரியான வாய்ப்புகள் இல்லை
இந்நிலையில் தற்போது இவர் தான் இனி சர்வதேச போட்டிகளில் இடம்பெறபோவதில்லை என அறிவித்துள்ளார். முன்னதாக இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் கவுத்தம் கம்பீர் இந்திய அணியால் புக்கணிக்கப்பட்டதை அடுத்து சமீபத்தில் தனது ஓய்வினை அறிவித்தார். பின்னர் அரசியலில் களமிறங்கி தற்போது பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.