ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு தடை விதித்தது நீதிமன்றம்
ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு தடை விதித்து உத்தரவிட்டது உயர்நீதிமன்ற மதுரை கிளை.
ஸ்டெர்லைட் ஆலையத்தின் 2_வது யூனிட் விரிவாக்க பணிக்கு சட்ட விரோதம் அனுமதி பெற்றுள்ளது. அந்த அனுமதியை ரத்து செய்த வேண்டும் எனக்கூறி பேராசிரியர் பாத்திமா உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை இன்று விசாரணைக்கு வந்தது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் நீதிபதிகள் சுந்தர் மற்றும் அனிதா அமர்வு தீர்ப்பு வழங்கியது. அந்த தீர்ப்பில் கூறியதாவது,
மத்திய சுற்றுச்சூழல் துறைக்கு தவறான தகவல் கொடுத்து ஆலை விரிவாக்கத்திற்கு அனுமதி பெற்றது சட்ட விரோதம் ஆகும். எனவே ஆலை விரிவாக்கத்திற்கு தடை விதிப்பதோடு, அனுமதியும் ரத்து செய்யப்படுகிறது. ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கம் குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்க வேண்டும். மேலும் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு மத்திய அரசு எந்த வகையில் அனுமதி அளித்தது தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் எனக்கூறி வழக்கை ஜூன் மாதத்திற்கு ஒத்திவைத்தனர்.