மயிலாடுதுறை சிறுத்தை எங்கே? தொடரும் தேடுதல் வேட்டை, இறந்து கிடந்த ஆடு.. 9 பள்ளிகளுக்கு விடுமுறை!
School Holiday in Mayiladuthurai: மயிலாடுதுறை பதுங்கியுள்ள சிறுத்தையை பிடிக்க 3 கூண்டுகள், வலைகள் அமைக்கப்பட்டு உள்ளது. ஆரோக்கியநாதபுரத்தை ஒட்டியுள்ள பகுதியில் உள்ள 9 பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு.
மயிலாடுதுறை மாவட்டம் செய்திகள்: மயிலாடுதுறை நகரில் செம்மங்குளம் பகுதியில் கடந்த 2 ஆம் தேதி சிறுத்தை நடமாட்டம் தென்பட்டது. இதையடுத்து, சிறுத்தையை பிடிக்க வனத்துறை, தீயணைப்புத்துறை மற்றும் காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். சிறுத்தையை பிடிக்க 3வது நாளாக வனத்துறை தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில், சிறுத்தை அங்கிருந்து 3 கிமீ தொலைவை நேற்றிரவு கடந்து ஆரோக்கியநாதபுரம் என்ற இடத்தில் பதுங்கியுள்ளது என சிசிடிவி கேமராவில் பதிவான காட்சி மூலம் தெரிய வந்துள்ளது.
சிறுத்தைப்புலியை பிடிக்க 10 குழுக்கள் தேடுதல் வேட்டை
இதுகுறித்து ஆரோக்கியநாதபுரத்தில் முகாமிட்டு ஆய்வு செய்துவரும் நாகை மாவட்ட வன அலுவலர் அபிஷேக் தோமர் கூறுகையில், "சிறுத்தையை பிடிப்பதற்கு மதுரையில் இருந்து மூன்று கூண்டுகள் மற்றும் வலைகள் வரவழைக்கப்பட்டு காட்டுப்பகுதியில் வைக்கப்பட்டு உள்ளதாகவும், ஆனைமலை புலிகள் காப்பகத்தில் இருந்து வன காவலர்கள் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் வருகை புரிந்து 14 அதிநவீன சென்சார் பொருத்திய கேமராக்கள் காட்டுப்பகுதியில் பொருத்தப்பட்டு உள்ளது. சிறுத்தையை பிடிக்க 10 குழுக்கள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடைபெற்று வருவதாகக் கூறினார்.
மேலும் படிக்க - ஓட்டுப்போட லீவு... ஏப்ரல் 19ஆம் தேதி பொது விடுமுறை - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
9 பள்ளிகளுக்கு இன்று விடுமுறை -மாவட்ட ஆட்சியர் உத்தரவு
இதனிடையே, சிறுத்தை நடமாட்டம் தென்பட்ட ஆரோக்கியநாதபுரம் பகுதியில் உள்ள மயூரா மெட்ரிக் பள்ளி, புனித அந்தோனியார் உயர்நிலைப்பள்ளி, டாக்டர் அம்பேத்கார் நகராட்சி தொடக்கப்பள்ளி, சின்ன ஏரகலி நகராட்சி தொடக்கப்பள்ளி, அக்ளுர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, தூய அந்தோணியார் துவக்கப்பள்ளி மறையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, அழகு ஜோதி நர்சரி பிரைமரி ஸ்கூல், கேம் பிரிட்ஜ் ஸ்கூல் ஆகிய 9 பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் மகாபாரதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் -மாவட்ட ஆட்சியர்
மேலும் மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம். வீட்டை வெளியே வரவேண்டாம். அப்படியே வெளியே வந்தாலும் எச்சரிக்கையாக இருக்க வெட்நும் எனவும், விரைவில் சிறுத்தைப்புலி பிடிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் மகாபாரதி அறிவுறுத்தி உள்ளார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ