சென்னை: புதன்கிழமை தமிழகத்தில் COVID-19 தொற்றால் பாதிக்கப்பட்ட 5,659 பேர் புதிதாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. தற்போது ஒட்டுமொத்த எண்ணிக்கை மாநிலத்தில் 5,97,602 ஆக உயர்ந்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னையில் மட்டும் இன்று 1,295 புதிய COVID-19 நோயாளிகள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். மாநிலத்தின் பிற மாவட்டங்களில் 4,364 பேர் புதிதாக COVID-19 தொற்றால் பாதிக்கப்படுள்ளதாக பதிவாகியுள்ளது.


இன்று மட்டும் COVID-19 தொற்றால் தமிழகத்தில் 67 பேர் இறந்துள்ளனர். இதனுடன் மொத்த இறப்பு எண்ணிக்கை 9,520 ஆக உயர்ந்துள்ளது.


ALSO READ: இந்தியாவில் கொரோனா தடுப்பு மருந்துக்கான காத்திருப்பு எப்போது முடிவுக்கு வரும்.. !!!


கடந்த சில வாரங்களில் சென்னையில் COVID-19  தொற்று எண்ணிக்கையில் லேசான வீழ்ச்சி காணப்பட்டாலும், ஒரே நாளில் 1000-துக்கும் மேலானவர்கள் பாதிக்கப்படுவது சென்னையில் மீண்டும் துவங்கியுள்ளது.


செவ்வாயன்று சில லாக்டௌன் கட்டுப்பாடுகளை மாநில அரசு மேலும் தளர்த்தியுள்ளது. புறநகர் ரயில்கள், பள்ளிகள், கல்லூரிகள், கடற்கரைகள், பூங்காக்கள், தியேட்டர்கள், நீச்சல் குளங்கள் மற்றும் பிற பொழுதுபோக்கு இடங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அரசு பயிற்சி மையங்கள் மற்றும் சந்தைகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


இதற்கிடையில் நாளுக்கு நாள் COVID-19 தொற்று எண்ணிக்கை நாட்டிலும் உலகிலும் அதிகரித்து வருகின்றது. தடுப்பு மருந்து (Vaccine) இன்னும் சந்தையில் வராத நிலையில், கொரோனா வைரஸ் அச்சம் இன்னும் உச்சத்தில்தான் உள்ளது. பல தளர்வுகளும் அளிக்கப்பட்டு வருவதால், பொது மக்கள் அனைவரும் அனைத்து வித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் கடைபிடிக்க வேண்டியது மிகவும் அவசியமாகிறது.


ALSO READ: October 31 வரை லாக்டௌனை நீட்டித்தது தமிழக அரசு: புதிய தளர்வுகள் அறிவிப்பு!!