தமிழகத்தில் ஜூன் 1 ஆம் தேதி முதல் ஜூன் 12 ஆம் தேதி வரை 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்தில் மார்ச் மாதம் முதல் ஏப்ரல் முதல் வாரத்திற்குள் +2, 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படுவது வழக்கம். ஆனால் கொரோனா பாதிப்பால் பள்ளிகள், கல்லூரிகள் கடந்த மார்ச் 24 ஆம் தேதி முதல் மூடப்பட்டுவிட்டது.


எனினும் +2 மாணவர்களுக்கு ஓரிரு தேர்வுகள் மட்டுமே பாக்கியிருந்ததால் அவை நடத்தி முடிக்கப்பட்டது. 10 ஆம் வகுப்புகளுக்கு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அவை ஒத்தி வைக்கப்பட்டன. கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில் 10 ஆம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்படும் என பரவலாக பேசப்பட்டது. ஆனால், அரசோ அனைத்திற்கும் 10 ஆம் வகுப்பு தேர்வு அடித்தளம் என்பதால் நிச்சயம் தேர்வு நடத்தப்படும் என்றது. இந்த நிலையில் வரும் ஜூன் 1 ஆம் தேதி முதல் 10-ஆம் வகுப்பு தேர்வு நடத்தப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 


இந்த தேர்வு 12 ஆம் தேதி முடியும் என தெரிவித்துள்ளார். மார்ச் 24 ஆம் தேதி +2 தேர்வு எழுத முடியாமல் போனவர்களுக்கு ஜூன் 4-ல் தேர்வு நடத்தப்படும். 12 ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகள் மே 27 ஆம் தேதி தொடங்கும் என அமைச்சர் தெரிவித்துள்ளார். 


பத்தாம் வகுப்பு தேர்வு அட்டவணை: 


  1. ஜூன் 1- மொழிப்பாடம் 

  2. ஜூன் 3- ஆங்கிலம் 

  3. ஜூன் 5- கணிதம் 

  4. ஜூன் 6- விருப்பப் பாடம் 

  5. ஜூன் 8- அறிவியல் 

  6. ஜூன் 10- சமூக அறிவியல் ஜூன் 12- தொழிற்கல்வி (வொகேஷனல்)  


முன்னதாக மார்ச் 26 ஆம் தேதி திட்டமிடப்பட்ட 11 வது வேதியியல், கணக்கியல் மற்றும் புவியியல் ஆவணங்கள் 2020 ஜூன் 2 ஆம் தேதி நடத்தப்படும். 2020 மார்ச் 24 தேர்வில் கலந்து கொள்ள முடியாத எச்எஸ்இ +2 (12 வது பொதுத் தேர்வுகள் 2020) மாணவர்களுக்கு, வேதியியல், கணக்கியல், புவியியல் காகிதம் ஜூன் 4, 2020 காலை மீண்டும் நடத்தப்படும்.


அதிகாரப்பூர்வ தேதி தாள் விரைவில் அதிகாரப்பூர்வ வலைத்தளமான dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும் என்பதை மாணவர்கள் கவனத்தில் கொள்ளலாம். அனைத்து மாணவர்களும் ஆன்லைனில் வெளியானதும் பொது தேர்வு தேதிகளை சரிபார்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.