10ம் வகுப்பு பொதுத்தேர்வு: தமிழகம். புதுச்சேரியில் நாளை துவக்கம்
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை புதன்கிழமை முதல் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடக்கம்
இந்நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை புதன்கிழமை (08-03-17) 10ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கி வரும் 30ம் தேதி வரை நடைபெறும் என்று தேர்வுத்துறை ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி நாளை 10ம் வகுப்பு தேர்வு தொடங்குகிறது.
இந்த ஆண்டு சுமார் 10 லட்சம் மாணவ மாணவிகள் தேர்வு எழுத ஆயத்தமாக இருக்கிறார்கள். தேர்வுக்காக மாநிலம் முழுவதும் 371 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஏதேனும், அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் தடுக்க தலைமை ஆசிரியர்கள், மாவட்ட கல்வி அதிகாரிகள், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் ஆகியோர் தலைமையில் பறக்கும் படைகளும் அமைக்கப்பட்டுள்ளன.
கடந்த 2-ம் தேதி பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடங்கி தற்போது தொடர்ந்து நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.