ரேஷன் கடைகளில் அளிக்கப்படவுள்ள 14 மளிகை பொருட்களின் முழு விவரம்
ரேஷன் கடைகளில் 14 பொருட்கள் அடங்கிய மளிகை தொகுப்பு வழங்கும் திட்டம் தொடங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் (M Karunanidhi) 98வது பிறந்தநாளை இன்று முன்னிட்டு தமிழகத்தில் அனைத்து ரேஷன் கடைகளில் 14 பொருட்கள் அடங்கிய மளிகை தொகுப்பு வழங்கும் திட்டம் தொடங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் (MK Stalin) அறிவித்திருந்தார். அதன்படி இந்த திட்டம் இன்று முதல் தொடங்கப்படுகிறது.
இந்நிலையில் ரேஷன் கடைகளில் (Ration Shops) அளிக்கப்படவுள்ள 14 மளிகை பொருட்களின் முழு விவரம் இங்கே காண்க.,
ALSO READ | கலைஞர் கருணாநிதி பிறந்தநாள்: கொரோனா நிவாரண திட்டங்களை தொடங்கி வைக்கிறார் தமிழக முதல்வர்
சர்க்கரை- 500 கிராம்
கோதுமை – 1 கிலோ
உப்பு- 1 கிலோ
ரவை- 1 கிலோ
உளுத்தம் பருப்பு- 500 கிராம்
புளி- 250 கிராம்
கடலை பருப்பு- 250 கிராம்
டீ தூள் -200கிராம்
கடுகு- 100 கிராம்
சீரகம்- 100 கிராம்
மஞ்சள் தூள்- 100 கிராம்
மிளகாய் தூள்- 100 கிராம்
குளியல் சோப்பு 25 கிராம் – 1
துணி துவைக்கும் சோப்பு (250 கிராம்)- 1 ஆகியவை இந்த 14 மளிகை பொருட்களில் அடங்கும்.
முன்னதாக கொரோனா நிவாரண (Coronavirus) நிதியாக ரூ.4000 வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி முதல் தவணையாக மே மாதம் ரூ.2000 அளிக்கப்பட்டது. மேலும் ஜூன் மாதம் ரூ.2000 அளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று முதல் ஜூன் மாத நிவாரண தொகை ரூ.2000 அளிக்கப்படவுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR