கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த எஸ்.வி. நாயுடு வீதி.... பட்டப்பகலில் ஏரியா முழுக்க போலீசார் குவிந்து கிடந்தார்கள். வீதியில் உள்ள வீடுகள் அனைத்தும் கதவுகள் மூடப்பட்டு ஆள்நடமாட்டம் இல்லாமல் கிடந்தது. இந்நிலையில் அப்பகுதியில் உள்ள வீடொன்று போலீசாரின் பாதுகாப்பில் கொண்டுவரப்பட்டிருந்தது. ஏதோ பெரிய அசம்பாவிதம் அரங்கேறியிருப்பதைக் காட்சிகள் உறுதிப்படுத்தியது. ஆம், கொலை.... இதே வீட்டில் வாழ்ந்துவந்த 76வயது மூதாட்டி நாகலட்சுமி கழுத்து நெறித்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். எதற்காக அவர் கொலை செய்யப்பட்டார் ? யார் அவரை கொலை செய்தார் ? என்ற கோணத்தில் விசாரணை தொடங்கினர். அப்போது வெளிவந்த தகவல்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


நாகலட்சுமியின் கணவர் பெயர் சதாசிவம். சொந்தமாக பேருந்து வைத்து இயக்கி வந்தார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு உடல்நலக் குறைவால் அவர் இறந்துவிட, நாகலட்சுமி தனது மகன் செந்தில்வேலுடன் வசித்து வந்தார். சம்பவத்தன்று காலை வீட்டை விட்டு வெளியே சென்ற செந்தில் திரும்ப வீடு திறம்பிய போது கதவுகள் திறந்து கிடந்தது. உள்ளே சென்ற பார்த்தபோது சோபாவில் நாகலட்சுமி பேச்சு மூச்சில்லாமல் கிடந்தார். பார்த்ததும் பதறிப்போன செந்தில் தாயை தட்டி எழுப்ப அவர் இறந்துவிட்டார் என்பதை உணர்ந்தார். உடனே தனது சகோதரிக்கும் உறவினர்களுக்கு போன் போட்டு வரவழைத்தார். ஆரம்பத்தில் வயது முதிர்ச்சியால் தாய் இறந்துவிட்டார் என்று நினைத்துக்கொண்டிருக்கும் போது, சிறுது நேரத்தில் அந்த எண்ணம் உடைந்து போனது. காரணம், நாகலட்சுமி அணிந்திருந்த சுமார் 20 சவரன் தங்க நகைகள் காணாமல் போயிருந்தது. உடனே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். வீட்டில் கிடைத்த கைரேகை பதிவுகளை சேகரித்துக் கொண்ட பின் விசாரணையைத் துவக்கினர். காவலனின் மூன்றாம் கண் சிசிடிவி கேமிரா என்பார்கள். அதே சிசிடிவிதான் மூதாட்டியின் உயிரை எடுத்தவரையும் காட்டிக்கொடுத்தது. ஆனால் அதுயார் என தெரியவரவே, அங்கிருந்த எல்லோரும் மிரண்டு போனார்கள். 



17 வயது இளம்பெண்.... சம்பவத்தன்று நாகலட்சுமியின் வீட்டுக்கு சென்றுவந்தது வீடியோவில் பதிவாகியிருந்தது.எதிர்வீட்டில் வசித்துவந்த அவரை பிடித்து விசாரித்தனர். முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தவர் மீது சந்தேகம் வலுத்ததும் அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று முறைப்படி விசாரித்தனர். அதில் அவர் நாகலட்சுமியை கழுத்தை நெறித்துக் கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். எல்லாம் நகைக்காகத்தான். இளம்பெண் வாலிபர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். அந்த வாலிபரை இன்னும் சில மாதங்களில் திருமணம் செய்து கொள்ளவும் திட்டமிட்டிருக்கிறார். இந்நிலையில்தான் நன்கு பழகிய நாகலட்சுமி, ஏராளமான நகைகளை அணிந்திருப்பதைத் தெரிந்துவைத்திருந்த இளம்பெண், தனியாக இருந்த நேரம் பார்த்து வீட்டிற்குள் நுழைந்தார். நாகலட்சுமியின் கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு அவரது நகைகளையும் எடுத்துள்ளார். நாகலட்சுமியின் மகன் செந்தில்வேலும் அவரது சகோதரியும் வீட்டிற்குள் வந்த போது அந்த இளம்பெண் சோபா அருகிலேயே ஒளிந்து இருந்திருக்கிறார். இவர்களைப் பார்த்ததும், பாட்டி கை-கால்களை இழுத்துக் கொண்டு துடித்ததைப் பார்த்து வீட்டிற்குள் வந்தேன் என்று கூறியவரே அங்கிருந்து நைசாக நழுவியோடினார். இதனால் அவர்மீது செந்திலுக்கு சந்தேகம் வராமல் போனது.  


மேலும் படிக்க | ‘செயின் பறிப்பு’க்கு முடிவு கட்டப்படுமா ? - குமுறும் குடும்ப பெண்கள்..!


இந்நிலையில், இளம்பெண்ணின் ஆடைக்குள் ஒளித்து வைத்திருந்த 20 பவுன் தங்க நகைகளை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்து பாதுகாப்பில் வைத்துள்ளனர். காதலனை கரம் பிடிக்க மூதாடியை கொலை செய்த இளம்பெண் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் படிக்க | இளையராஜா சர்ச்சைப் பேச்சுகளும், சில ரிப்ளைகளும்.!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR