‘செயின் பறிப்பு’க்கு முடிவு கட்டப்படுமா ? - குமுறும் குடும்ப பெண்கள்..!

சென்னை அடுத்த தாம்பரத்தில் பட்டப்பகலில் நடந்த சென்ற பெண்ணிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Written by - Gowtham Natarajan | Last Updated : Apr 16, 2022, 09:11 PM IST
  • நடந்த சென்ற பெண்ணிடம் செயின் பறிப்பு
  • ‘செயின் பறிப்பு’க்கு முடிவு கட்டப்படுமா ?
  • நடவடிக்கை எடுக்குமா காவல்துறை ?
‘செயின் பறிப்பு’க்கு முடிவு கட்டப்படுமா ? - குமுறும் குடும்ப பெண்கள்..! title=

சென்னை தாம்பரம் அடுத்த கணபதிபுரம் பகுதியில் பட்டப்பகலில் நடந்தேறிய பகீர் சம்பவத்தால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். அதே பகுதியைச் சேர்ந்த சுதா என்ற பெண், கடைக்கு சென்றுவிட்டு வீட்டு திரும்பியபோது அந்த கொடூரம் நடந்தது. சுதா நடந்து சென்ற தெருவில் டூவிலரில் நுழைந்த மூன்று பேரில் இருவர், திடீரென்று அவரை நெருங்கினார்கள். 

chain snatching

எதிர்பார்த்திருக்க மாட்டார் இப்படியெல்லாம் நடக்கும் என்று. நொடிப்பொழுதில் சுதாவின் கழுத்தில் கிடந்த  4 சவரன் தங்கச் செயினை பறித்துக்கொண்டு அவர்கள் வந்த டூவிலரில் தப்பியோடினர். அக்கம்பக்கத்தில் யாரும் இல்லாததால் செயின் பறிப்பில் ஈடுபட்டவர்களை பிடிக்க முடியாமல் போனது. இதனையடுத்து செயினை பறிகொடுத்த சுதா சேலையூர் காவல்நிலையத்தில் உடனடியாக புகாரளித்தார். புகாரின் பேரில் அப்பகுதியில் வைக்கப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து செயின் பறிப்பில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர். கடந்த சில நாட்களாக தாம்பரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பட்டப்பகலில் செயின் பறிப்பு சம்பவங்கள் நடந்துவருவதால் அப்பகுதி பெண்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், நேற்றுமுன் தினம் கன்னியாகுமரியில் ரகசிய காதலியுடன் சொகுசு வாழ்க்கையை அனுபவிக்க, தனியாக இருக்கும் பெண்களை குறிவைத்து செயின் பறிப்பில் ஈடுபட்ட வாலிபரால் பெரும் அதிர்வலைகள் ஏற்பட்டது. 

chain snatching

போலீசில் பிடிபட்ட வாலிபர் ஆன்றோ, இதுவரை 9 பெண்களின் தங்க செயினை பறித்திருப்பதாக வாக்குமூலம் கொடுத்தார். இதற்கிடையே, கன்னியாகுமரி மட்டுமல்லாது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் செயின் திருட்டு என்பது நீண்ட காலமாக தொடர்கதையாக நீடிக்கிறது. கடைகள், வீடுகள் என பல்வேறு இடங்களில் சிசிடிவி கேமிராக்கள் பதிவது அதிகரித்த போதும், செயின் பறிப்பில் ஈடுபடுபவர்கள் அடங்கிய பாடில்லை. இதனால் பட்டப்பகலில் கூட பெண்கள் தங்க செயின் அணிந்து தனியாக வெளிவர அச்சமடைந்து கிடக்கிறார்கள். வளர்ந்து வரும் பொருளாதாரம், கால நிலைகளுக்கு நடுவே குற்ற சம்பவங்கள் மட்டும் அதிகரித்துக்கொண்டே செல்ல என்ன காரணம் ? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. 

மேலும் படிக்க | 3 பேரை காரில் கடத்திய கும்பல் - '36 மணி நேரத்தில்' அதிரடி காட்டிய தனிப்படை போலீசார்

குற்ற சம்பவங்களைத் தேடி ஒழிக்கும் தமிழக காவல்துறை செயின் பறிப்பிலும் விரைந்து நடவடிக்கை எடுக்கக்கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கஞ்சா விற்பனையை முழுவதுமாக ஒழிக்க தமிழக டிஜிபி சைலேன்ந்திர பாபு அவர்களால் ஏற்படுத்தப்பட்ட ஆப்ரேசன் 2.0 திட்டத்தை போலவே செயின் பறிப்பு சம்பவங்களை கட்டுக்குள் கொண்டுவர புதியதோர் திட்டம் பிறப்பிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. அதையும் காத்திருந்து பார்ப்போம்...

மேலும் படிக்க |  தனியாக இருக்கும் பெண்களை குறிவைக்கும் ‘தில்லாலங்கடி திருடன்’

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துகொள்ளவும், உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைதளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News