கரும்பு நிலுவை தொகைக்கு ரூ.182 கோடி ஒதுக்கீடு: அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம்
கூட்டுறவுத் துறை மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு கொடுக்க வேண்டிய பாக்கி தொகையாக மாநில அரசு ரூ.182 கோடி நிதி ஒதுக்கியுள்ளது.
தி.மு.க தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் நெல் , கரும்பு கொள்முதல் விலைகளை உயர்த்த வேண்டும் என்றும் தனியார் மற்றும் கூட்டுறவு ,பொதுத்துறை சர்க்கரை ஆலைகள் வைத்திருக்கும் நிலுவை பாக்கி தொகைகளை வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கமும் , தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கமும் கோரிக்கை விடுத்திருந்தனர். மேலும் வேளாண்மை துறை அமைச்சரையும் சந்தித்து விவசாயிகள் சங்கத்தினுடைய தலைவர்கள் கோரிக்கை மனுவையும் அளித்திருந்தனர்.
இந்நிலையில் கூட்டுறவுத் துறை மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு கொடுக்க வேண்டிய பாக்கி தொகையாக மாநில அரசு ரூ.182 கோடி நிதி ஒதுக்கியுள்ளது.
அண்மையில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் வேளாண்மை நிதி நிலை அறிக்கையின் (Agriculture Budget) மீது நடந்த விவாதங்களுக்கு பதிலளித்த அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம், தனியார் ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதற்காக ஆலை நிர்வாகம் , துறை அதிகாரிகள் , சங்க பிரதிநிதிகள் அடங்கிய முத்தரப்பு கூட்டம் ஒன்று நடத்தப்பட உள்ளதாகவும் அக்கூட்டத்திற்கு பிறகு அதற்கான உரிய தீர்வு காணப்படும் என்றும் சட்டப்பேரவையில் கூறினார்.
ALSO READ: இன்று முதல் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழ்நாடு விவசாயிகள் (Farmers) நலன்களை கருத்தில் கொண்டு தமிழகத்தில் செயல்பட்டு வரும் பத்து கூட்டுறவு மற்றும் இரண்டு பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய தொகையில் 31.07.2011 அன்றைய நிலவரப்படி மீதமுள்ள தொகையை விவசாயிகளின் நலன் கருதி அவர்களுக்கு வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
"அதன்படி ரூ.182 கோடியே 11 லட்சம் வழிவகை கடனாக விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. இந்த தொகையானது அமாரவதி, அறிஞர் அண்ணா , மதுராந்தகம், திருத்தணி , செங்கல்வராயன் , எம்.ஆர்.கே உட்பட அனைத்து கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளுக்கு பிரித்து கொடுக்கப்படும்” என்று சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை விவாதத்தின் போது வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் (MRK Panneerselvam) செல்வம் தெரிவித்துள்ளார்.!!
ALSO READ: தமிழ்நாட்டில் அரசு வேலைக்காக பதிவு செய்து காத்திருப்போர் விவரங்கள் இதோ!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR