இன்று முதல் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் (Regional Meteorological Centre, Chennai) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியதாவது., தமிழகத்தில் (Tamil Nadu) தற்போது நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக கோவை, நீலகிரி வட கடலோர மாவட்டங்கள், தென் மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் இன்று ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிகவும் மிதமான மழை பெய்யக் கூடும்.
ALSO READ | TN Rain Alert: தமிழகத்தின் இந்த மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு
இன்று கோவை, நீலகிரி, தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகை, பெரம்பலூர், அரியலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழையும் ஏனைய மாவட்டங்களான புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
ஆகஸ்ட்22 (August 22 ) நாளை மதுரை, திருச்சி, கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், குமரி, நெல்லை, தென்காசி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை போன்ற மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக் கூடும்.இது தவிர ஏனைய மாவட்டங்களான புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் உள்ள பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்யும்.
ஆகஸ்ட் 23 (August 23) அன்றைக்கு உள் மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழையும் மற்றும் ஏனைய மாவட்டங்களான புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
ALSO READ | பள்ளி, தியேட்டர் திறப்பா? கூடுதல் ஊரடங்கு தளர்வுகளா? முதல்வர் இன்று ஆலோசனை
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR