அவிநாசி தேசிய நெடுஞ்சாலையில் பஸ்-லாரி மோதி விபத்து; 19 பேர் பலி; 23 பேர் காயம்
50 க்கும் மேற்பட்டோர் அமரக்கூடிய கேரள அரசு நடத்தும் வோல்வோ பஸ் கர்நாடகாவின் பெங்களூரிலிருந்து எர்ணாகுளத்திற்கு சென்று கொண்டிருந்தது.
திருப்பூர்: தமிழ்நாட்டின் கோவையில் நெடுஞ்சாலையில் எதிரே வந்துகொண்டிருந்த பேருந்து மற்றும் லாரி மோதிக்கொண்டதில் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் உட்பட 19 பேர் உயிரிழந்தனர் மற்றும் இருபத்தி மூன்று பேர் காயம் அடைந்துள்ளனர். அவர்கள் வெவ்வேறு மருத்துவமனைகளுக்கு கொண்டு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளனர். விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். திருவனந்தபுரம் சென்ற அரசு சொகுசு பேருந்தும் டைல்ஸ் லோடு ஏற்றிச்சென்ற லாரியும் மோதிக்கொண்டதில், இந்த கோர விபத்து அவிநாசி 6 வழி தேசிய நெடுஞ்சாலையில் நடந்துள்ளது.
50 க்கும் மேற்பட்டோர் அமரக்கூடிய கேரள அரசு நடத்தும் வோல்வோ பஸ் கர்நாடகாவின் பெங்களூருவில் இருந்து எர்ணாகுளத்திற்கு சென்று கொண்டிருந்ததாக மாநில போக்குவரத்து அமைச்சர் ஏ.கே.சசீந்திரன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இந்த விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை உயரக்கூடும் என்று போலீசார் தெரிவித்தனர். விபத்துக்குள்ளான லாரி கோவையில் இருந்து வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
படத்தில் உள்ள காட்சிகளிந படி, வெள்ளை பஸ்ஸின் வலது புறம் முற்றிலுமாக சேதமடைந்த பஸ் சாய்ந்து கிடக்கிறது.
வேகமாக வந்துக்கொண்டு இருந்த லாரியின் டயர் வெடித்ததாகவும், பஸ் மீது மோதிவதற்கு முன் கொள்கலன் பிரிக்கப்பட்டு சாலையில் உருண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
"சாத்தியமான அனைத்து நிவாரண நடவடிக்கைகளும் தமிழக அரசு மற்றும் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்படும்" என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அலுவலகம் தெரிவித்துள்ளது.