ஜல்லிக்கட்டுக்கு மாடு முட்டி 2 வீரர்கள் பலி
புதுக்கோட்டையில் நடந்த ஜல்லிக்கட்டு விளையாட்டில் பங்கேற்ற இரு வீரர்கள் பலியானார். மேலும் இதில் 57-க்கும் மேற்பட்டோர் டுகாயம் அடைந்தனர்.
ஜல்லிக்கட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து பலர் மறியல் போராட்டம் நடத்தினர். அவசர சட்டம் இயற்றப்பட்டாலும் நிரந்தர தீர்வு வரும் வரை ஜல்லிக்கட்டு நடத்த மாட்டோம் என போராட்டம் தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில் காலையில் புதுக்கோட்டை ராப்பூசல் பகுதியில் ஜல்லிக்கட்டு நடந்தது. அமைச்சர் விஜயபாஸ்கர் துவக்கி வைத்தார்.
இதற்கிடையில் மாடு பிடி வீரர் மோகன் (30), ராஜா(30) மாடு முட்டியதில் படுகாயமுற்றார். ஆஸ்பத்திரி கொண்டு செல்லப்பட்டார். சிகிச்சை பலன் அளிக்காமல் இவர் இருவரும் உயிரிழந்தார்.
சுமார் 3.30 மணி நேரம் நடைபெற்ற இந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில், 500-க்கும் மேற்பட்ட காளைகள் வாடி வாசலில் இருந்து களத்தில் சீறிப்பாய்ந்தன.