பள்ளி, கல்லூரி மாணவர்கள் மத்தியில் வலி நிவாரணி மாத்திரைகளை தண்ணீரில் கரைத்து ஊசி மூலம் போதை ஏற்றிக்கொள்ளும் பழக்கம் அதிகரித்து வருகிறது. இதற்கு அடிமையாகும் மாணவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த நிலையில் சென்னையில் வலி நிவாரணி மாத்திரைகளை போதைக்காக விற்பனை செய்ய முயன்ற 3 பேரை போலீஸார் கைது செய்தனர். சென்னை கொடுங்கையூர் பகுதியில் வழக்கம் போல் நேற்று இரவு போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். கிருஷ்ணமூர்த்தி நகர் பிரதான சாலையில் ஆட்டோ ஒன்றை மடக்கி விசாரித்தபோது அதில் இருந்த மூன்று இளைஞர்கள் முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்தனர். 


அவர்களை சோதனையிட்டதில் சந்தேகத்துக்கிடமான மாத்திரை வகைகள் வைத்திருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து மூவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தபோது அவர்களிடம் இருந்தது கர்ப்பிணிகளுக்கு பிரசவ வலி தெரியாமல் இருக்க கொடுக்கப்படும் ஒரு விதமான வலி நிவாரணி மாத்திரைகள் என்பது தெரியவந்தது. இதனை அளவுக்கு அதிகமாக பயன்படுத்தினால் போதை ஏறி, நரம்புகள் தளர்ந்து உயிரிழக்கும் அபாயம் உள்ளதாக மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மேலும் படிக்க | உயிருக்கு எமனாகும் உலகின் மிக ஆபத்தான 5 போதை பொருட்கள்..!!!



இந்த மாத்திரைகளை மொத்தமாக மலிவு விலையில் பெற்று கல்லூரி மாணவர்களுக்கு செல்போன் மூலம் விற்பனை செய்ய இவர்கள் கொண்டு சென்றது விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து கொடுங்கையூர் கிருஷ்ணமூர்த்தி நகரை சேர்ந்த ஜாபர், திருவெற்றியூர் பகுதியைச் சேர்ந்த பிரபு, கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த  சூர்யா ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்தனர். 



இவர்களில் சூர்யா மற்றும் பிரபு இருவரும் தண்டையார்பேட்டையில் உள்ள மருந்து கடையில் வேலை பார்த்துள்ளனர். இதனால் அங்கிருந்து இவற்றை மொத்தமாக வாங்கி ஜாபரிடம் விற்பனை செய்ததும் தெரியவந்துள்ளது. இவர்களிடம் இருந்து 584 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்த போலீசார் விற்பனைக்காக பயன்படுத்தப்பட்ட 2 செல்போன்களையும் பறிமுதல் செய்தனர்.  மேலும், போதை மாத்திரை விற்பனையில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா எனும் கோணத்தில் கைதான நபர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


மேலும் படிக்க | ஆன்லைனில் போதை மாத்திரை விற்பனை: தலைச்சுற்ற வைக்கும் பகீர் பின்னணி!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR