உயிருக்கு எமனாகும் உலகின் மிக ஆபத்தான 5 போதை பொருட்கள்..!!!

போதைப்பொருள் வழக்கில் பாலிவுட்டின் ராஜா என்று அழைக்கப்படும் ஷாருக் கானின் மகன் ஆரியன் தான் சிறையில் உள்ளார். ஒரு வருடத்திற்கும் மேலாக, பல பெரிய நட்சத்திரங்கள் பாலிவுட் மற்றும் தொலைக்காட்சி துறையை சேர்ந்த பலர் மீது போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கண்காணித்து வருகின்றனர். சிலர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், உயிருக்கு எமனாகும் உலகின் மிக ஆபத்தான ஐந்து போதை மருந்துகளைப் பற்றி  அறிந்து கொள்ளலாம். 

 

1 /5

கோகோயின் என்பது ஒரு வகை போதைப்பொருள். உலகில் நன்கு அறியப்பட்ட  கோகேயின் ECSTASY, X, XTC போன்ற பெயர்களாலும் அறியப்படுகிறது. மக்கள் அதை தூள் மற்றும் ஊசி வடிவில் உட்கொள்கின்றனர். அதீத இன்பத்தை கொடுக்கும் இதை எடுத்துக் கொள்ளும் போது மூளையில் டோபமைன் இரசாயனம் அதிகரிக்கிறது. Addictioncenter.com இன் அறிக்கையின்படி,  அதிகப்படியான நுகர்வு காரணமாக, உயிரிழப்பு அல்லது உறுப்பு செயலிழப்பும் ஏற்படலாம்.

2 /5

இதனை விருந்துகளில் மெஃபெட்ரான் அல்லது மியாவ்-மியாவ் என்ற பெயரில் அறியப்படுகிறது. இந்த மருந்து காப்ஸ்யூல் மற்றும் தூள் வடிவில் கிடைக்கிறது. இந்த மருந்தை உட்கொள்வது மனிதனுக்குள் அதிக உற்சாகத்தை உருவாக்குகிறது. இதனை உட்கொள்ளும் நபர் அதிகம் பேசத் தொடங்குகிறார். இந்த மருந்தைப் பயன்படுத்துவதால், விரல்கள் குளிர்ச்சியாகவும் நீலமாகவும் மாறும், மூக்கில் இருந்து இரத்தப்போக்கு பிரச்சனையும் இருக்கலாம். அதிகப்படியாக எடுத்துக் கொள்ளும் போது மரணம் ஏற்படலாம்.

3 /5

MDMA அல்லது மோலி என்று அழைக்கப்படும் போதை மருந்தின் மற்ற பெயர்கள் சூப்பர்மேன், ரோலக்ஸ் பிங்க் சூப்பர்மேன், மாண்டி ஆகியவை. காப்ஸ்யூல்கள், மாத்திரைகள் மற்றும் திரவ வடிவில் கிடைக்கிறது. இத்ஃஐ அதிகமாக எடுத்துக் கொண்டால் குமட்டல், உடல் பிடிப்பு, மங்கலான பார்வை போன்ற பிரச்சனைகள் வருகின்றன.  

4 /5

கெட்டமைன் போதை மருந்து வைட்டமின் கே, சூப்பர் கே, ஸ்பெஷல் கே, கிரீன் மற்றும் கே போன்ற பெயர்களாலும் அறியப்படுகின்றது. இது மாத்திரை மற்றும் தூள் வடிவில் கிடைக்கிறது. இந்த மருந்தை எடுத்துக் கொண்டால் இதய துடிப்பு மற்றும் இரத்த ஒட்டத்தின் வேகத்தை அதிகரிக்கிறது. இதனை அதிகம் பயன்படுத்தினால் மரணம் ஏற்படலாம்.  

5 /5

மெத்தாம்பேட்டமைன்கள் என்று அழைக்கப்படும் போதை மருந்து யாபா, கிரிஸ்டல் மெத், மெத் மற்றும் க்ராங்க் போன்ற பெயர்களாலும் அறியப்படுகின்றது. இது மாத்திரைகள், தூள் மற்றும் படிகங்களின் வடிவத்திலும் கிடைக்கிறது. இந்த மருந்தை எடுத்துக் கொண்டால் இதய துடிப்பு மற்றும் இரத்த ஒட்டத்தின் வேகத்தை அதிகரிக்கிறது. இது நுரையீரல், சிறுநீரகம் மற்றும் மூளையில் மிகவும் எதிர்மறையான விளைவைக் கொண்டிருக்கிறது. இதனை அதிகம் பயன்படுத்தினால் மரணம் ஏற்படலாம். 

You May Like

Sponsored by Taboola