ஏப்ரல் 30 ஆம் தேதியுடன் ஓய்வுபெறவுள்ள மருத்துவர்கள், செவிலியர்களுக்கு 2 மாத காலம் பணி நீட்டிப்பு செய்து முதல்வர் பழனிசாமி உத்தரவு!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழ்நாட்டில் ஒட்டுமொத்தமாக ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் பாதிப்புகளில் நான்கில் ஒரு பங்கு சென்னையில் தான் நிகழ்ந்திருக்கின்றன. சென்னையில் கடந்த 10 நாட்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு இரு மடங்குக்கும் கூடுதலாகியிருக்கிறது. இந்நிலையில், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கபட்டவர்களின் மொத்தம் எண்ணிக்கை 1755 ஆக உயர்ந்துள்ளது. மாநிலத்தில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது.


இந்நிலையில், வரும் ஏப்ரல் 30 ஆம் தேதியுடன்  ஓய்வு பெறும் அரசு மருத்துவர்கள், செவிலியர்களுக்கு பணியை நீட்டித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். மேலும் 2 மாதங்களுக்கு ஒப்பந்த பணியை நீடிக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். 


இது குறித்து அவர் கூறியுள்ளதாவது... தமிழகத்தில் கொரோனாவுக்கு எதிராக மருத்துவர்கள் செவிலியர்கள் இரவு பகலாக பணியாற்றி வருகின்றனர். எனவே, இம்மாத்த்துடன் பணி ஓய்வு பெறவுள்ள மருத்துவர்கள், செவிலியர்களின் பணி காலம் நீட்டிப்பு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒப்பந்த முறையில் 2 மாதத்திற்கு பணியாற்ற நியமன ஆணைகள வழங்கப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார். 


மேலும், தற்போது 1,323 செவிலியர்கள் மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் எனவும் தேர்வு செய்யப்பட்டுள்ள செவிலியர்களுக்கு பணி ஆணை கிடைத்தவுடன் பணியில் சேர வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.