சென்னை ஐகோர்ட்டு, ஐகோர்ட்டு மதுரை கிளைக்கு 2020-ம் ஆண்டுக்கான விடுமுறை நாட்கள் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னை ஐகோர்ட் தலைமை பதிவாளர் சி.குமரப்பன் வெளியிட்டுள்ள அறிவிக்கையில் கூறியிருப்பதாவது:-


ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு ஜனவரி 1ம் தேதி, பொங்கல் பண்டிகைக்கு ஜனவரி 14ம் தேதி முதல் 17ம் தேதி வரையிலும், தெலுங்கு புத்தாண்டுக்காக மார்ச் 25ம் தேதி, மகாவீர் ஜெயந்திக்காக ஏப்ரல் 6ம் தேதிய புனித வெள்ளிக்காக ஏப்ரல் 10ம் தேதியும் விடுமுறை விடப்படுகிறது. தமிழ் புத்தாண்டு மற்றும் டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு ஏப்ரல் 14ம் தேதி விடுமுறை விடப்படுகிறது. மேலும் இதற்கு முதல் நாளும் விடுமுறை விடப்படுகிறது.


தொழிலாளர் தினத்தை முன்னிட்டு மே 1ம் தேதியும், ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு மே 25ம் தேதியும், கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு ஆகஸ்டு 11ம் தேதி அதற்கு முதல் நாள் ஆகஸ்டு 10ம் தேதி திங்கட்கிழமையும் ஐகோர்ட்டுக்கு விடுமுறை விடப்படுகிறது.


காந்திஜெயந்தியை முன்னிட்டு அக்டோபர் 2ம் தேதியும், விஜயதசமியை முன்னிட்டு அக்டோபர் 26 மற்றும் 27ம் தேதிகளிலும், மிலாது நபியை முன்னிட்டு அக்டோபர் 30ம் தேதியும், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 12ம் தேதி முதல் 17ம் தேதி வரையிலும், கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் 24 மற்றும் 25ம் தேதியும் விடுமுறை விடப்படுகிறது.


இதுதவிர குடியரசு தினம், பக்ரீத், சுதந்திர தினம், விநாயகர் சதுர்த்தி, மொகரம், ஆயுதபூஜை, தீபாவளி ஆகியவைகள் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வருகின்றன. மேலும் கோடை விடுமுறை மே 1ம் தேதி முதல் 31ம் தேதி வரையிலும், தசரா பண்டிகை விடுமுறை அக்டோபர் 17ம் தேதி முதல் 26ம் தேதி வரையிலும், கிறிஸ்துமஸ் விடுமுறை டிசம்பர் 25ம் தேதி முதல் 31ம் தேதி வரையிலும் விடுமுறை விடப்படுகிறது.


இவ்வாறு கூறப்பட்டுள்ளது.