Tamil Nadu Lok Sabha Election 2024: தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்தாலும் ஜூன் 4 வரை கட்டுப்பாடுகள் தொடரும் என தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழ்நாட்டை பொறுத்தவரை 39 நாடாளுமன்ற தொகுதிக்கும் மற்றும் விளவங்கோடு சட்டமன்றத் தொகுதிக்கும் (இடைத்தேர்தல்) வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணிவரை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இந்தியா முழுவதும் ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. அதில் தமிழகத்தில் முதல் கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட்டு, ஜூன் 4 ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும். 


தேர்தல் கட்டுப்பாடுகள் தொடரும்.. -தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி


இந்நிலையில், தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்தாலும் ஜூன் 4 வரை கட்டுப்பாடுகள் தொடரும் என தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார். மறுபுறம் தமிழகம் முழுதும் தேர்தல் பறக்கும் படை இதுவரை நடத்திய சோதனையில் 208 கோடி ரூபாய் மற்றும் 4.53 லட்சம் மதிப்புள்ள மது பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன என்றும் சத்ய பிரதா சாஹு கூறினார்.


மேலும் படிக்க - பீகாரில் முழங்கிய மோடி.. “நாற்பதும் நமதே” உங்கள் கனவுதான் எனது தீர்மானம் -பிரதமர் உத்தரவாதம்


தேர்தல் நடைமுறைகள் மற்றும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்னென்ன?


-- வெறுப்பை ஏற்படுத்தக்கூடிய வகையில் யாரும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடக்கூடாது.


-- கட்சித் தலைவர்கள் மற்றும் வேட்பாளர்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து விமர்சிப்பதைத் தவிர்க்க வேண்டும்


-- ​​கடந்தகால வரலாறு, கட்சியின் கொள்கைகள் மற்றும் கட்சியின் திட்டம் குறித்து மட்டுமே பேச வேண்டும்


-- சாதி, மதம், மொழி ஆகியவற்றின் அடிப்படையில் பதட்டத்தை ஏற்படுத்தக்கூடிய எந்தவொரு செயலிலும் ஈடுபடக்கூடாது.


-- கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள் உட்பட எந்தவொரு வழிபாட்டுத் தலங்களை தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தக் கூடாது.


-- சமூக வலைத்தளங்களில் விமர்சனம் செய்யலாம். ஆனால் போலிச் செய்திகளைப் பரப்பக்கூடாது.


-- தேர்தல் பரப்புரையில் குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளை ஈடுபடுத்தக்கூடாது.


-- வாக்குக்கு பணம் பொருள் கொடுத்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.


-- பணம், பொருட்கள், மது விநியோகம் தீவிரமாக கண்காணிக்கப்படும்.


-- சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு வங்கிகள் வாகனங்களில் பணம் எடுத்துச் செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. 


-- டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை முழுவதுமாகக் கண்காணிக்கப்படும்.


-- ட்ரோன மூலம் மாநில எல்லைகள் கண்காணிக்கப்படும். 


-- நாடும் முழுவதும் சோதனைச் சாவடிகள் மூலமாகவும் கண்காணிக்கப்படும்.


மேலும் படிக்க - 'யாரையும் நம்ப முடியவில்லை' சிக்கிய ரூ. 4 கோடி குறித்து நயினார் நாகேந்திரன் விளக்கம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ