Bihar Lok Sabha Election 2024: பிரதமர் மோடி ஜமுய் பேரணி: மக்களவை தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளதால், நாடு முழுவதும் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. அனைத்து கட்சிகளும் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வரிசையில் பாஜகவுக்காக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ள பிரதமர் மோடி, இன்று பீகார் மாநிலமான ஜமுய் நகரில் தேர்தல் பேரணியில் பங்கேற்று உரையாற்றினார். இந்த பேரணியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளின் தலைவர்களும் பிரதமருடன் மேடையில் இருந்தனர். 2019 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, சிராக் பாஸ்வானும், முதல்வர் நிதிஷ்குமாரும் முதல்முறையாக ஒரே மேடையில் காணப்பட்டனர். இந்த தேர்தல் பேரணியில் போஜ்புரி மொழியில் தனது உரையைத் தொடங்கிய பிரதமர் மோடி, "பீகாரின் 40 தொகுதிகளையும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வழங்க பீகார் மக்கள் முடிவு செய்துவிட்டதாக கூறினார்.
இது தேர்தல் பேரணியா? அல்லது வெற்றிப் பேரணியா?
போஜ்புரி மொழியில் பேரணியை தொடங்கிய பிரதமர் மோடி, "முதலில் பாபா தனேஷ்வர் நாத்தை வணங்கினார். பாபா தனேஷ்வர் நாத்தின் இந்த புனித பூமிக்கு நாம் தலைவணங்க வேண்டும் என்று கூறினார். மகாவீரரின் இந்த அறிவு பூமியில் அனைவருக்கும் வாழ்த்துக்கள். நான் உங்களிடம் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன். இது தேர்தல் பேரணியா அல்லது வெற்றிப் பேரணியா? இன்று பீகார் மக்கள் அற்புதங்களைச் செய்துள்ளீர்கள். இன்று ஜமுய் என்ற இந்த அழகிய மண்ணில் கூடியிருக்கும் இந்த கூட்டம் மக்களின் மனநிலை என்ன என்பதைச் சொல்கிறது. பாஜக மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவாக ஜமுய் எழுப்பிய இந்த சத்தம் பீகாரில் இருந்து நாடு முழுவதும் எதிரொலிக்கிறது.
பீகார் மக்களின் முடிவுக்கு நான் தலை வணங்குகிறேன்
ஜமுய் நவாடா, முங்கர், பங்கா ஆகியவற்றுடன் சேர்த்து பீகார் மாநிலத்தில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளையும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றி கணக்கில் எழுத தயாராகி விட்ட பீகார் மக்களின் முடிவுக்கு நான் தலை வணங்குகிறேன். பீகார் முழுவதும் மீண்டும் மோடி அரசு என்று கூறி வருகிறது என்றார்.
மேலும் படிக்க - தமிழகத்திற்கு மோடி 100 முறை வந்தாலும் பாஜக மண்ணை தான் கவ்வும் - திமுக
ராம் விலாஸ் பாஸ்வானை புகழ்ந்து பேசிய பிரதமர் மோடி
நான் உங்கள் மத்தியில் வரும்போதெல்லாம் நீங்கள் எனக்கு மிகுந்த அன்பைக் கொடுத்திருக்கிறீர்கள் என்று பிரதமர் மோடி கூறினார். இன்று நான் ஒரு குறையை உணர்கிறேன். பீகாரின் மகனும், தலித்துகளின் அன்புக்குரியவரும், தாழ்த்தப்பட்டவர்களுக்காக பாடுபட்ட எனது சிறந்த நண்பரும், பத்ம விபூஷண் விருது பெற்றவருமான ராம் விலாஸ் ஜி நம்மிடையே இல்லாததால் மிகுந்த வருத்தம் அளிக்கிறது. எங்களைப் பொறுத்தவரை அவர் இல்லாமல் தேர்தலை சந்திப்பது இதுவே முதல் தேர்தல். ராம்விலாஸ் ஜியின் யோசனையை எனது இளைய சகோதரர் சிராக் பாஸ்வான் முழுத் தீவிரத்துடன் முன்னெடுத்துச் செல்வதில் நான் திருப்தி அடைகிறேன். ஏப்ரல் 19 ஆம் தேதி தேசிய ஜனநாயகக் கூட்டக்கு நீங்கள் அளிக்கும் ஆதரவு, பாய் அருண் பாரதி ஜிக்கு நீங்கள் அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் ராம்விலாஸ் ஜியின் உறுதியை மேலும் வலுப்படுத்தும் என்றார்.
முதல்வர் நிதிஷ் குமாரை பாராட்டிய பிரதமர் மோடி
பீகார் மாநிலம் முழு நாட்டிற்கும் திசை காட்டி வருகிறது என்றார். இந்த பீகார் மாநிலம் சுதந்திரப் போராட்டத்திலும், சுதந்திர இந்தியாவின் அடித்தளத்தை அமைப்பதிலும் பெரும் பங்காற்றியுள்ளது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக பீகாரின் அர்ப்பணிப்புக்கு சரியான நீதி வழங்க முடியவில்லை. தேசிய ஜனநாயக கூட்டணி பெரும் முயற்சியால் பீகாரை பெரும் குழப்பத்தில் இருந்து வெளியே கொண்டு வந்துள்ளது. இதில் நம் நிதிஷ் பாபு பெரும் பங்கு வகித்துள்ளார் என முதல்வர் நிதிஷ் குமாரை பாராட்டினார்.
இப்போது பீகார் வேகமாக வளர்ச்சியடையும் நேரம் வந்துவிட்டது. எனவே, 2024 தேர்தல் பீகார் மற்றும் இந்தியாவின் எதிர்காலத்திற்கு மிகவும் தீர்க்கமானது. இந்த தேர்தல் பீகாரின் கனவுகளை நிறைவேற்றும் தேர்தல். இன்று ஒருபுறம் காங்கிரசு, ஆர்ஜேடி போன்ற கட்சிகள் தங்கள் ஆட்சியால், உலகம் முழுவதும் இந்தியாவின் பெயரைக் கெடுத்தாலும், மறுபுறம் பாஜக மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு "இந்தியாவை வளர்ச்சியை நோக்கி" கட்டியெழுப்ப வேண்டும் என்ற ஒரே இலக்காக மட்டுமே கொண்டுள்ளது. இனி மகிழ்ச்சியான பீகாரைக் கட்டமைக்கிறோம் என்றார்.
#WATCH | Bihar: During his public rally in Jamui, PM Modi, says "...I am satisfied that my younger brother Chirag Paswan is taking forward the ideas of Ram Vilas Paswan with full seriousness...The land of Bihar has been showing direction to the entire country...but unfortunately,… pic.twitter.com/UCBRyJR5KC
— ANI (@ANI) April 4, 2024
எதிர்க்கட்சிகளை கடுமையாக தாக்கி பேசிய மோடி
கடந்த அரசாங்கத்தின் செயல்பாடுகளையும் தனது சொந்த அரசாங்கத்தின் செயல்பாட்டையும் ஒப்பிட்டுப் பார்த்து பிரதமர் எதிர்க்கட்சிகளை கடுமையாக குறிவைத்தார். 10 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவைப் பற்றி உலகின் கருத்து என்ன என்று பிரதமர் கேட்டார். காங்கிரஸ் போல் பாஜக செயல்படாது என்று மோடி கூறினார்.
இன்றைய இந்தியா உலகிற்கு திசை காட்டுகிறது. 10 ஆண்டுகளில் இந்தியாவின் நற்பெயரும் அந்தஸ்தும் எப்படி உயர்ந்துள்ளது என்பதை உலகமே உற்று நோக்குகிறது. இன்று இந்தியா உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக மாறியுள்ளது. நமது சந்திரயானும், நமது மூவர்ணக் கொடியும் இதுவரை யாரும் எட்டாத நிலவின் மூலையை அடைந்துவிட்டன. இந்தியா ஜி 20 மாநாட்டை நடத்தும் போது, அது உலகம் முழுவதும் விவாதிக்கப்படுகிறது. யார் இதை செய்தது என்றார் பிரதமர் மோடி
இன்று ஜமுய் நகரம் வளர்ச்சியை நோக்கி நகர்கிறது
இன்று நாடு எப்படி மாறுகிறது என்பதற்கு பீகாரே சாட்சி. பீகார் எப்படி மாறுகிறது என்பதற்கு ஜாமுய்யில் ஒரு உதாரணத்தையும் பார்க்கலாம். ஆர்ஜேடி மற்றும் காங்கிரஸின் இருண்ட ஆட்சி காலத்தில் ஜமுய்க்கு என்ன வகையான அடையாளம் கிடைத்தது? ஜமுய் நகரம் ஆர்ஜேடியின் ஜங்கள் ஆட்சியால் பாதிக்கப்பட்டு இருந்தது. அது நக்சலைட் அடையாளத்துடன் காணப்பட்டது. அரசின் திட்டங்கள் இங்கு வருவதில்லை. இங்கு சாலைகள் அமைக்க நக்சலைட்டுகள் அனுமதிக்கவில்லை. இதனால் இங்குள்ள ஏழை தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் நஷ்டம் அடைந்தனர்.
இன்று அதே ஜமுய் வளர்ச்சி நெடுஞ்சாலையில் வேகமாக நகர்கிறது. நக்சலிசம் அழிந்து விட்டது. நக்சலிசத்தின் பாதையில் வழிதவறிச் சென்றவர்களை, நமது அரசு பிரதான நீரோட்டத்தில் இணைத்துள்ளது. அவர்களின் குடும்பத்தினருக்கு முழு ஆதரவை வழக்கினோம். இப்போது இந்தப் பகுதியில் விரைவுச் சாலை மற்றும் மருத்துவக் கல்லூரியும் திறக்கப்பட்டது. பீகார் முழுவதும் சாலைகளுக்கு சுமார் ரூ.1 லட்சம் கோடி செலவிடுகிறது. இந்த முயற்சிகளினால் இங்கு ஏராளமான வேலை வாய்ப்புகளும் சுயதொழில் வாய்ப்புகளும் உருவாகி வருகின்றன.
மேலும் படிக்க - மோடியின் உத்தரவாதத்திற்கு எதிர் தாக்குதலாக காங்கிரஸ் கையில் எடுத்த 'ஆயுதம்'..
உங்கள் கனவுதான் எனது தீர்மானம் -பிரதமர் மோடி
ஒவ்வொரு ஏழையின் கனவின் முக்கியத்துவத்தையும் மோடிக்கு முழுமையாகத் தெரியும். பீகாரின் என் இளைஞர்களே, தாய்மார்களே, சகோதரிகளே, ஒவ்வொரு பெரியவர்களே, என் வார்த்தைகளை எழுதி வைத்துக்கொள்ளுங்கள், உங்கள் கனவுதான் எனது தீர்மானம். ஏழைகள் நலனுக்கு மத்திய அரசு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது.
மோடியின் உத்தரவாதம்.
மத்திய அரசின் முயற்சியால், பீகாரில் ஏழைகளுக்கு 37 லட்சம் நிரந்தர வீடுகள் கிடைத்துள்ளன. இன்று பீகாரில் உள்ள 9 கோடி ஏழை மற்றும் எளிய மக்கள் இலவச ரேஷன் பெறுகிறார்கள். அடுத்த 5 ஆண்டுகளுக்கு இது தொடரும் என்பது மோடியின் உத்தரவாதம்.
பீகாரிலும் 84 லட்சத்துக்கும் அதிகமான ஆயுஷ்மான் அட்டைகள் வழங்கப்பட்டு உள்ளன. எண்ணங்கள் சரியாக இருக்கும் போது முடிவுகள் சரியாக இருக்கும். பாஜக அரசு மனிதர்களுக்கு மட்டும் சேவை செய்யாமல், கால்நடைகளையும் சமமாகப் பாதுகாக்க முடிவு செய்துள்ளோம். பீகாரின் சுமார் 2 கோடி விலங்குகளை கால் மற்றும் வாய் நோயிலிருந்து பாதுகாக்க தடுப்பூசி பிரச்சாரத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது என்று பிரதமர் கூறினார்.
ஊழல்வாதிகள் அனைவரும் இன்று மோடிக்கு பயந்து கொண்டு இருக்கிறார்கள்
கோவிட் காலத்தில் போடப்பட்ட தடுப்பூசியை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும், நாங்கள் விலங்குகளுக்கும் தடுப்பூசி போடுகிறோம். முன்பு ஏழைகளுக்கு கொடுக்கப்படும் பணம் நடுவழியில் கொள்ளையடிக்கப்பட்டது. இப்போது அது நேரடியாக உங்கள் கணக்கில் வந்து சேருகிறது. பிரதமர் கிசான் சம்மன் நிதியின் பலனை இன்று விவசாயிகள் பெறுகின்றனர். நீங்கள் சொல்லுங்கள், இந்த ஆணவக் கூட்டணியின் அரசாங்கம் இருந்திருந்தால், உங்கள் பணத்தை நேரடியாக உங்கள் கணக்குகளுக்கு அனுப்பும் முறை இருந்திருக்குமா? ஆர்ஜேடியும் காங்கிரஸும் உங்களிடமிருந்து எல்லாப் பணத்தையும் கொள்ளையடித்து விட்டு, உங்களிடம் இருந்து கையெழுத்து பெற்றிருப்பார்கள். எப்பொழுதும் சண்டை போட்டுக் கொண்டிருந்த நாட்டின் ஊழல்வாதிகள் அனைவரும் இன்று மோடிக்கு பயந்து கொண்டு இருக்கிறார்கள் என்றார்.
ஊழல் ஒழிக்கப்பட வேண்டுமா இல்லையா? பிரதமர் மோடி
ஊழலை அகற்றுங்கள் என்று நான் சொல்கிறேன், ஊழல்வாதிகளை காப்பாற்றுங்கள் என்கிறார் அவர்கள்.. நீங்கள் சொல்லுங்கள், ஊழல் ஒழிக்கப்பட வேண்டுமா இல்லையா? கொள்ளையடித்தவர்கள் திருப்பித் தர வேண்டுமா இல்லையா? ஊழலுக்கு எதிரான இவ்வளவு பெரிய போராட்டத்தை எதிர்க்கும் இவர்கள் யார்? என பீகார் ஜமுய் பேரணியில் மோடி உரையாற்றினார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ