250 தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்: செங்கோட்டையன்
அரசுப் பள்ளிகளில் 250 தற்காலிக ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம், சட்டப்பேரவையில் நடந்த பள்ளிக்கல்வித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அமைச்சர் செங்கோட்டையன் கூறியது:-
அரசு ஊழியர்களுக்கு தற்போது நடைமுறையில் இருக்கும் புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் குறித்து அரசு பரிசீலனை செய்து வருகிறது.
அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறையை போக்கும் வகையில் 15 நாட்களில் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று கூறியிருந்தார்.
அதன்படி, தரமாக உள்ள அரசுப் பள்ளிகளில் 250 தற்காலிக ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் முறையாக தேர்வு செய்து பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.