தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,710 பேருக்கு கொரோனா தொற்று..!
இந்தியாவிலேயே அதிகபட்சமாக 30 ஆயிரம் பரிசோதனை செய்யும் அளவை எட்டியுள்ளோம் என விஜயபாஸ்கர் பெருமிதம்..!
இந்தியாவிலேயே அதிகபட்சமாக 30 ஆயிரம் பரிசோதனை செய்யும் அளவை எட்டியுள்ளோம் என விஜயபாஸ்கர் பெருமிதம்..!
தமிழகத்தில் இன்று மேலும் 2,710 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 62,087 ஆக உயர்ந்துள்ளது, கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 794 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், இது குறித்து தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது.... தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 2,710 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில், 58 பேர் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் என கண்டறியபட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் மொத்தம் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 62,087 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 1,487 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளளது. இங்கு பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 42,752 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். அதில் அவருக்கு பாதிப்பு இல்லை என தெரியவந்துள்ளது. தமிழகத்தில் மொத்தமுள்ள 87 பரிசோதனை மையங்கள் மூலமாக இன்று ஒரே நாளில் 26,592 மாதிரிகள் சோதனையிடப்பட்டுள்ளன. இன்று வரையில் தமிழகத்தில் 9,19,204 மாதிரிகள் சோதனையிடப்பட்டுள்ளன.
இன்று அரசு மருத்துவமனையில் 30 பேரும், தனியார் மருத்துவமனையில் 7 பேரும் என 37 பேர் உயிரிழந்ததை அடுத்து, தமிழகத்தில் மொத்த பலி எண்ணிக்கை 794 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 1,358 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 34,112 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 27,178 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
READ | மதுரையில் நாளை நள்ளிரவு முதல் 30 ஆம் தேதி வரை முழு பொதுமுடக்கம்...!
இது குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில்.... "கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மகாராஷ்டிராவை விட தமிழகத்தில் அதிக எண்ணிக்கையில் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. கண்ணுக்கு தெரியாத நுண்ணுயிரியால் ஏற்படும் பாதிப்புகளை வல்லுனர்களால் கூட கணிக்க முடியவில்லை. கொரோனா எப்போது ஒழியும் என்று கடவுளுக்குத்தான் தெரியும் என்று முதல்வர் கூறினார். அவர் யதார்த்தமாக கூறியதில் என்ன தவறு இருக்கிறது? கொரோனா பரவலை கட்டுப்படுத்த பரிசோதனை அதிக எண்ணிக்கையில் நடத்தப்படுகிறது" என விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.