2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு: இன்று தீர்ப்பு தேதி வெளியாகிறது!!
2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில் இன்று சிபிஐ சிறப்பு கோர்ட் தீர்ப்பு தேதியை அறிவிக்க உள்ளது.
கடந்த காங்கிரஸ் கூட்டணி ஆட்சி காலத்தின் போது 2ஜி அலைவரிசை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. திமுகவின் ராஜ்யசபா எம்.பி., கனிமொழி, முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா உள்ளிட்டோர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இதனை சிபிஐ விசாரணை நடத்தியது.
கடந்த 10 ஆண்டுகளாக நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தி வந்த ஒரு வழக்கு, ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு. டெல்லி சிபிஐ நீதிமன்ற நீதிபதி ஓபி ஷைனி இந்த வழக்கை விசாரித்தார்.
திமுக ராஜ்யசபா எம்.பி. கனிமொழி, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ .ராஜா உள்ளிட்டோர் மீதான இந்த வழக்கின் தீர்ப்பு அரசியல் ரீதியாகவும், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக எதிர்பார்க்கப்படுகிறது.
அக்டோபர் 25-ம் தேதியன்று தீர்ப்பு தேதி குறித்து அறிவிக்கப்படும் என்று, நீதிபதி ஷைனி கடந்த மாதம் தெரிவித்திருந்தார். அதன்படி இன்று 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில் இன்று சிபிஐ சிறப்பு கோர்ட் தீர்ப்பு தேதியை அறிவிக்க படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.