2-ஜி வழக்கின் தீர்ப்பு 21-ம் தேதி: நீதிபதி ஓ.பி சைனி!
2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில் டிசம்பர் 21ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என டில்லி சி.பி.ஐ. கோர்ட் நீதிபதி சைனி அறிவித்துள்ளார்.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் 2-ஜி ஸ்பெக்ட்ரம் எனப்படும் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக புகார் கூறப்பட்டது. இந்த வழக்கு, டில்லி சி.பி.ஐ. சிறப்புகோர்ட்டில் நடைபெற்றது. கடந்த ஏப்ரல் 26-ம் தேதி வழக்கில் அனைத்து வாதங்களும் முடிவடைந்த நிலையில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு தேதி ஒத்திவைக்கப்பட்டது.
தீர்ப்பு எப்போது வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நீதிபதி சைனி, தீர்ப்பு தேதி இன்று வெளியிடப்படும் என அறிவித்திருந்தார்.
இந்நிலையில், வரும் 21-ம் தேதி காலை 10.30 மணிக்கு தீர்ப்பு விபரங்கள் அறிவிக்கப்படும் என்று சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி சைனி தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, கோர்ட்டில் இருந்து வெளியே வந்த கனிமொழியிடம் செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு ‘பார்க்கலாம்’ என்று பதில் கூறியுள்ளார்.