புற்றுநோயாளிகளுக்கு முடியை தானமாக வழங்கிய 3 சகோதரிகள்
சகோதரிகள் மூன்று பேரும் இணைந்து புற்றுநோய் நோயாளிகளுக்காக தலா 11 இன்ச் முடிகளை தானம் செய்தனர்.
புற்றுநோய் நோயாளிகளுக்கு ரேடியேஷன் தெரபி, கீமோதெரபி ஆகிய சிகிச்சைகளை கொடுக்கும் போது அதன் உஷ்ணத்தால் முடி கொட்டுவது வழக்கம். அதிலும் புற்றுநோய் முற்றி போகும் நோயாளிகளுக்கு தினசரி ஒரு பேக்கேஜ் போல் ரேடியேஷன் தெரபி கொடுக்கப்படும்.
அப்போது அவர்களது முடி மொத்தம் கொட்டி ஆங்காங்கே மட்டும் இருக்கும். இதனால் வேதனையடையும் பெண் நோயாளிகள் மொட்டை அடித்து கொள்வது வழக்கம். மேலும் சிலர் விக் எனப்படும் பொய் முடியை வைத்துக் கொள்வர். அந்த விக்கை செய்ய ஏராளமானோர் தங்கள் முடியை தானம் செய்வர். சிலர் ஒரு ஜான் அளவோ ஒரு முழம் அளவோ முடியை வெட்டி கொடுப்பர். ஒரு சிலர் மொட்டை அடித்து தனது முழு முடியையும் கொடுப்பர்.
மேலும் படிக்க | புற்றுநோய் குணமான ஆசிரியரை உற்சாகமாக வரவேற்கும் மாணவர்கள்- நெகிழவைக்கும் வீடியோ
அந்த வகையில் தற்போது சென்னை முடிச்சூர் எஸ்.கே. அவென்யூ நகரை சேர்ந்தவர் ஹரிபிரசாத், கிருஷ்ணவேணி தம்பதியின் மூத்த மகள் லக்சயா. இவர் 5ம் வகுப்பு படித்து வருகின்றார். இவருடைய சித்தி மகளான ஸ்மிதி, ஸ்வாதி ஆகிய லண்டனில் படித்து வருகின்றனர். விடுமுறைக்காக சென்னை வந்திருந்த நிலையில் சகோதரிகள் மூன்று பேரும் இணைந்து புற்றுநோய் நோயாளிகளுக்காக தலா 11 இன்ச் முடிகளை தானம் செய்தனர்.
அவர்களது புத்தகத்தில் புற்றுநோய் நோயாளிகளுக்கு முடி தானம் செய்வது குறித்து அறிந்துள்ள நிலையில், இந்த சிறுமிகள் 3 பேரும் தானம் செய்வது பெரும் பாராட்டுகுரியது. இது குறித்து மாணவி லக்சயா கூறும்போது, புற்றுநோய் நோயாளிகள் தங்களது முடிகளை இழந்து மிகுந்த மன வருத்தில் இருக்கும் நிலையில் தங்களது முடிகளை தானம் செய்து அவர்களுக்கு வழஙகும்போது சிறிய மகிழ்ச்சி அளிக்கும். இதுபோன்று தொடர்ந்து தான் முடிகளை தானம் செய்ய இருப்பதாகவும் மாணவி தெரிவித்தார். தற்போது இவர்கள் முடியுடன் இருக்கும் படமும் மொட்டை அடித்த பின்னர் எடுத்த படமும் தற்போது வைரலாகி வருகிறது.
மேலும் படிக்க | உணவுகளில் உள்ள 5 இரசாயனங்கள் புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கலாம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR