மன அழுத்தம், பயம், தேவையில்லாத சிந்தனைகள் எல்லாம் ஆரோக்கியமானவனையும் நோயாளியாக்கிவிடும். நம்பிக்கை உள்ளவர்களாக இருந்தால், எத்தகைய கொடிய பாதிப்புகளை எதிர்கொண்டிருந்தாலும், அதில் இருந்து வெற்றிகரமாக மீண்டு வந்துவிட முடியும். இதற்கான நிகழ்கால உதாரணங்கள் ஏராளமாக உள்ளன. அதவும் கேன்சர் உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு கூடுதல் நம்பிக்கை வேண்டும். நாம் குணமாகிவிடுவோம் என நம்பிக்கை கொள்பவர்கள் நிச்சயம் குணமாகவிட முடியும்.
மேலும் படிக்க | Viral Video: இது தான் கடல் அரக்கனா... ஆற்றில் உலாவும் ராட்சஸ மீன்
அவ்வாறு தன் மீது நம்பிக்கை கொண்ட ஆசிரியை ஒருவர், கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டபோதும் அதில் இருந்து வெற்றிகரமாக மீண்டு வந்துள்ளார். நம்பிக்கையோடு சிகிச்சை எடுத்துக் கொண்ட அவர், சிகிச்சையில் இருந்து குணமானதும் அவரிடம் படித்த மாணவர்கள் மருத்துவமனைக்கே சென்று ஆசிரியரை வரவேற்றுள்ளனர். மருத்துவமனையின் வாயிலில் கும்பலாக காத்திருந்த அவர்கள், தங்களின் ஆசிரியை சிகிச்சை முடிந்து வெளியே வரும்போது கைத்தட்டி உற்சாகமாக வரவேற்கின்றனர்.
Students gather outside to cheer on and surprise their beloved teacher at the completion of her cancer treatments.
"A day of great joy for all of us Last chemo, another stage won! We are immensely happy for you!"
— GoodNewsCorrespondent (@GoodNewsCorres1) April 13, 2022
தங்களுக்கு பாடமெடுத்த ஆசிரியை, கேன்சரில் இருந்து மீண்டு வந்ததைக் கண்டு மாணவர்களும் ஆனந்தக் கண்ணீர்விட்டு, ஆசிரியரை வரவேற்றனர். மருத்துவமனை வாயிலில் மாணவர்கள் கூடியிருப்பதைக் கண்ட ஆசிரியையும், கண்ணீர் விட்டு அழுகிறார். கைகூப்பி தன் மாணவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறார். அப்போது, கலர்கலரான பலூன்களைக் கொடுத்து ஆசிரியையை கட்டித் தழுவுகின்றனர். பலூன்களையும், கேக்குகளையும் பரிசாக கொடுக்கின்றனர். உணர்ச்சிப் பெருக்கு மிக்க இந்த வீடியோவை பார்ப்பவர்கள் கல் நெஞ்சக்காரர்களாக இருந்தாலும் கரைந்து அழுதுவிடுவார்கள். அந்த வீடியோவை இதுவரை டிவிட்டரில் மட்டும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளனர்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துகொள்ளவும், உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைதளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR