வீட்டுக்குள் புகுந்து 3 வயது குழந்தையை கடித்து குதறிய 3 வெறிநாய்கள்!
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் வீட்டில் இருந்த மூன்றரை வயது குழந்தையை 3 வெறி நாய்கள் கடித்துக் குதறி உள்ளன.
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் வீட்டில் இருந்த மூன்றரை வயது குழந்தையை 3 வெறி நாய்கள் கடித்துக் குதறி உள்ளன. சத்தம் கேட்டு ஓடி வந்த பெற்றோர் காயமடைந்த குழந்தையை மீட்டு அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று உள்ளனர். மேல் சிகிச்சைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை கொண்டு சென்று இருக்கிறார்கள்.
அதிராம்பட்டினத்தில் தெரு நாய்களின் தொல்லை காரணமாக பொதுமக்கள் கடும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். குறிப்பாக சிறார்கள், பெண்கள் இதனால் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். சமூக ஆர்வலர்களும் நாய்களை கட்டுப்படுத்த கோரிக்கை விடுத்து வருகிறார்கள். ஆனால் நடவடிக்கை எடுத்ததைபோல் தெரியவில்லை.
கடந்த மாதம் இரவு சேர்மன் வாடி - வண்டிப்பேட்டை இடைப்பட்ட சாலையில் இரு சக்கர வாகனம் சென்றுகொண்டு இருந்தபோது நாய்கள் குறுக்கே புகுந்தன. இருசக்கர வாகனத்தில் சென்றவர் சுதாரித்ததால் விபத்து தவிர்க்கப்பட்டது. சில மாதங்களுக்கு முன் அதிராம்பட்டினம் புதுமனைத் தெரு 4வது லைனில் நடந்து சென்ற பெண்ணை நாய் ஒன்று துரத்தி கடித்தது. அந்த பெண் கீழே விழுந்ததில் கை எழும்பில் பலத்த காயம் ஏற்பட்டது.
மேலும் படிக்க | மிஸ்டர் அண்ட் மிஸ் தமிழகம் 2023: பட்டத்தை வென்ற வீரர்-வீராங்கனை யார் தெரியுமா?
பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் நாய்களை கட்டுப்படுத்த கோரிக்கை விடுத்து வருகிறார்கள். ஆனால் நடவடிக்கை எடுத்ததைபோல் தெரியவில்லை. இந்த நிலையில் இன்று நடைபெற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த ஜூலை மாதம் அதிராம்பட்டினம் நகர சபைக் கூட்டத்தில் நாய் தொல்லையை கட்டுப்படுத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, அதிராம்பட்டினம் நகராட்சி 27 வார்டுகளில் தெருவில் உள்ள நாய்களுக்கு கருத்தடை செய்து கட்டுப்படுத்துவதற்கு நாய் ஒன்றுக்கு ரூ.1450 கட்டணம் என ரூ.3 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டு 3 மாதங்கள் கடந்து உள்ள நிலையில், அந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதா என்ற கேள்வி எழுந்து உள்ளது. தற்போது நாய்கள் தொல்லையும், அதன் எண்ணிக்கையும் அதிகரித்து உள்ளதாக மக்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ