முதல் முறையாக நாய் வளர்க்க விரும்புபவர்களா நீங்கள் - இவை தான் உங்களுக்கான பெஸ்ட் சாய்ஸ்!

வீட்டில் செல்ல பிராணிகளை வளர்க்க ஆர்வம் உள்ளவர்கள் நாய் வளர்க்க முடிவு செய்தால் இந்தியாவின் காலநிலைக்கு ஏற்ற வகையான நாய்களை தேர்வு செய்ய வேண்டும். அவற்றில் சில முக்கியமான நாய்களை பார்க்கலாம்.

 

1 /7

பொமரேனியன் இந்த வகை நாய்கள் மிகவும் சுட்டித்தனமானவை. வீட்டில் உள்ளவர்களிடம் மிகவும் சுறுசுறுப்புடன் விளையாடிக்கொண்டே இருக்கும். மிகவும் புத்திசாலித்தனமானவை. வீட்டிற்கு யாராவது புதிய நபர்கள் வந்தால் குரைப்பதை  நிறுத்துவது இல்லை. 

2 /7

லாப்ரடார்ஸ் : இந்த வகை நாய் மிகவும் செல்லமாக வளரக்கூடியவை. முறையான பயிற்சி வழங்கப்பட்டால் கடினமான வேலைகளை கூட இவர் ஈசியாக செய்து முடிப்பார். சிறந்த முறையில் கீழ்படியும் இந்த வகை நாய்கள் குழி பறிக்கவும், வாயை அசைத்துக்கொண்டே இருக்கும் குணம் உண்டு. 

3 /7

இந்திய நாட்டு நாய் வகை : நாய் வகையில் மிகவும் சிறந்தது. பராமரிப்பு செலவு என்பதே கிடையாது எனக்கூறலாம். வீட்டில் ஒரு நபராக வளரும் இந்த வகை நாய் ஒரு சிறந்த காவலாளி மற்றும் வீட்டின் உரிமையாளர்களுக்கு விஸ்வாசமாக இருக்கும். 

4 /7

கோல்டன் ரெட்ரீவர்ஸ் : இந்த வகையான நாய் ஒரு காவலாளி என நினைத்தால் அது தவறு. கோல்டன் ரெட்ரீவர்ஸ் குழந்தைகள் மற்றும் வீட்டில் உள்ள பிற செல்ல பிராணிகளிடம் எளிதாகவும், பாசமாகவும் பழகி விடும். இந்த வகை நாயிக்கு முறையான பயிற்சி கொடுத்தால் வீட்டு வேலைகள் கூட செய்யும். 

5 /7

ஜெர்மன் ஷெப்பர்ட் : இந்த வகையான நாய்கள் விரைவில் நண்பராகும் குணம் கொண்டவர். பாதுகாப்பை தாண்டி இவருக்கு முறையான பயிற்சி வழங்கினால் மிக சிறந்த ஒரு காவலாளியாக திகழ்வார். இவருக்கு முறையற்ற பயிற்சி அளித்து வெளியில் விடுவது ஆபத்தை ஏற்படுத்தும். 

6 /7

பாக்சர் : இந்த வகையான நாய்கள் மிகவும் விளையாட்டுதனமான கொஞ்சல் கொண்டவை. உரிமையாளரை விழுந்து விழுந்து பாதுகாக்கும் குணத்தில் இவரை அடித்துக்கொள்ள முடியாது. ஆனால் இவர் பேசத்தொடங்கினால் அதாவது குறைக்க தொடங்கினால் சற்று நேரம் நிறுத்தாமல் குறைப்பாராம். 

7 /7

டேஷண்ட்: குட்டையான கால்கள் உடைய நாய் வகை. இந்த நாய் உரிமையாளர் மற்றும் குடும்பத்தினரிடம் மிகவும் அன்பாக பழகும். ஆனால் வெளியில் இருந்து வீட்டிற்கு வரும் நபர்கள் கொஞ்சம் கவனமாக வரவேண்டும். காரணம் வெளி ஆட்களை பார்த்தால் உடனேயே டேஷண்ட் மிக வலிமையான காவலாளியாக மாறி விடுவார்.