சாமி சிலைகளை கடத்திய பா.ஜ.க நிர்வாகி உட்பட 4 பேர் கைது..!
பல கோடி ரூபாய் மதிப்புள்ள உலோக சாமி சிலைகளை கடத்திய பா.ஜ.க நிர்வாகி மற்றும் 2 காவலர்கள் உள்ளிட்ட 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்துாரை சேர்ந்த அலெக்ஸ் என்கிற அலெக்ஸ்சாண்டர் என்பவர் சட்ட விரோதமாக தொன்மையான சுவாமி சிலைகளை விற்க முயற்சி செய்வதாக மதுரை சிலை தடுப்பு பிரிவுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனடிப்படையில், சிலை திருட்டு தடுப்பு பிரிவு கூடுதல் காவல் இயக்குநர் ஜெயந்த் முரளியின் உத்தரவுப்படி தனிப்படை விசாரணையை தொடங்கியது.
ALSO READ | பா.ஜ.க யாரையும் தூண்டி விடவில்லை, மாணவிக்கு நியாயம் வேண்டும்: விஜயசாந்தி
உடனடியாக அவர்கள் அவர்கள் இருவரையும் கைது செய்த காவல்துறை, ஆயுதப்படை காவலர் இளங்குமரன் மற்றும் கருப்பசாமியிடம் விசாரணை நடத்தியுள்ளது. அவர்கள், திண்டுக்கல் ஆயுதப்படை காவலர் நாகநரேந்திரன், விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல்லை சேர்ந்த கணேசன் உள்ளிட்டோருடன் சென்று சேலம் மாவட்டம் எடப்பாடியில் சிலையை எடுத்து வந்ததாக தெரிவித்துள்ளனர். இந்த சிலையை அலெக்ஸாண்டர் மூலமாக 5 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யவும் முயற்சித்துள்ளனர்.
கடத்தி வந்த சிலைகளை ராமநாதபுரம் மாவட்டம், கூரிச்சாத்த அய்யனார் கோவிலின் பின்புறத்தில் உள்ள ஒரு கால்வாயில் மறைத்து வைத்திருந்துள்ளனர். அங்கு சென்று காவல்துறையினர் சோதனை செய்ததில் 2 நடராஜர் சிலைகள், நாக கன்னி, காளி, முருகன், விநாயகர், நாக தேவதை என 7 உலோக சிலைகள் கைப்பற்றப்பட்டன.
ALSO READ | தேர்தலில் களமிறங்கும் திருநங்கைகள்: திராவிட கட்சிகளின் சமூக நீதிக்கு மற்றொரு சான்று
இதில் அலெக்ஸ் என்பவர் ராமநாதபுரம் மாவட்டம் பா.ஜ.க சிறுபான்மையினர் பிரிவு மாவட்ட செயலாளராக உள்ளார். இதில் தொடர்புடைய மேலும் 2 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். பா.ஜ.க நிர்வாகி காவலர்களுடன் கூட்டு சேர்ந்து சாமி சிலைகளை கடத்தி விற்பனை செய்ய முயற்சி சம்பவம், மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR