திருச்சி வெடி விபத்து வழக்கில் 5 பேர் கைது
திருச்சி துறையூர் அருகே நடந்த வெடி விபத்தில், 19 பேர் உயிர் இழந்த வழக்கில், வெடிமருந்து தொழிற்சாலையின் இயக்குநர் உட்பட, ஐந்து பேரை போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.
திருச்சி: திருச்சி துறையூர் அருகே நடந்த வெடி விபத்தில், 19 பேர் உயிர் இழந்த வழக்கில், வெடிமருந்து தொழிற்சாலையின் இயக்குநர் உட்பட, ஐந்து பேரை போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.
திருச்சி மாவட்டம், துறையூர் அருகே வெடிமருந்து தொழிற்சாலையில் டிசம்பர் 1-ம் தேதி திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 19 பேர் உயிர் இழந்தனர்.
இந்நிலையில் இந்த வெடி விபத்து குறித்த வழக்கு, சி.பி.சி.ஐ.டி., பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த ஆலையின் உரிமத்தை ரத்து செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.