அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கான ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை சென்னை குரோம்பேட்டையில் 2-வது நாளாக நடைபெற்றது. 14-வது ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக, 7-வது கட்டமாக நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில், அமைச்சர் சிவசங்கர், போக்குவரத்துத் துறை முதன்மை செயலாளர் கோபால் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள் பங்கேற்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதைத் தொடர்ந்து, போக்குவரத்து ஊழியர்களுக்கு 5 சதவீதம் ஊதிய உயர்வு அளிக்க ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இனி 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்தவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 


இந்த ஊதிய உயர்வு ஒப்பந்தம் மூலம், ஓட்டுநர்களுக்கு ரூ.2,012 முதல் ரூ.7,981 வரையும், நடத்துனர்களுக்கு ரூ.1,965 முதல் ரூ.6,640 வரையிலும், ஊதிய உயர்வு கிடைக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.  4 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய ஒப்பந்தம் என்ற அரசின் நிபந்தனைக்கு சிஐடியூ, ஏஐடியூசி தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. 


பேச்சுவார்த்தைக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், 14-வது ஊதிய உயர்வு ஒப்பந்த பேச்சுவார்த்தை 7 கட்டங்களாக நடைபெற்று இன்று முடிவுற்று, தொழிற்சங்கப் பிரதிநிதிகள் கையெழுத்திட்டு ஒப்பந்தம் நிறைவேறியதாகக் குறிப்பிட்டார். 


மேலும் படிக்க | சாலையோரம் வீசப்படும் பச்சிளம் குழந்தைகள் - உண்மையில் இதன் உளவியல் பிரச்சனைகள்தான் என்ன ?


இந்த ஒப்பந்தித்தின் சில முக்கிய அம்சங்களாவன : 


1) அடிப்படை ஊதியமானது போக்குவரத்து கழகங்களில் பணிபுரிகின்ற நிரந்தர தொழிலாளர்களுக்கு 31.8.2019 அன்று பெற்று வந்த அடிப்படை ஊதியத்தை பேமேட்ரிக்ஸில் பொருத்தி 5% உயர்வு அளித்து கணக்கீடு செய்து புதிய அடிப்படை ஊதியம் நிர்ணயம் செய்யப்படும்.


2)  1.2.2001 முதல் மாதம் ரூ.1,000 இடைக்கால நிவாரணம் வழங்கப்பட்டு வந்தது. இந்த இடைக்கால நிவாரணமானது, தற்போதைய ஒப்பந்தப்படி 1.1.2022 முதல் 31.7.2022 வரையிலான நிலுவைத்தொகையில் நேர் செய்யப்படும்.


3) தொழிற்சங்கப் பிரதிநிதிகள் வைத்த கோரிக்கையின்படி, சலுகைப்படி, தனி பேட்டா, ரிஸ்க் மற்றும் ஷிப்ட் அலவன்ஸ், இரவு பயணப்படி, இரவு தங்கல் படி உள்ளிட்டவை உயர்த்தி வழங்கப்பட்டிருக்கிறது.


4)  அனைத்து போக்குவரத்து கழகங்களிலும் ஒரே வழிகாட்டுதலுக்கான நிலையாணை (Standing Order) நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுத்து குழு அமைக்கப்பட்டிருக்கிறது.


5) கொரோனா காலத்தில் பணிபுரிந்து அனைத்து தொழிலாளர்களுக்கும் சிறப்பு ஊதியமாக ஒரு பணிக்கு ரூ.300 வழங்கப்படும்.


மேலும் படிக்க | ரீல்ஸ் மோகத்தில் சிறுவனின் விபரீத விளையாட்டு: போலீசிடமே கைவரிசை


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ