அனைத்து கிராமங்களிலும் அடித்தட்டு மக்களுக்கு அதிக சேவை வழங்கும் (அம்மா திட்டம்) திட்டத்தின் கீழ், நாளை (ஜன., 12) வருவாய் துறை சார்பில் சென்னையில் கீழ்கானும் பகுதிகளில் சிறப்பு முகாம்கள் நடைப்பெறவுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த சிறப்பு முகாமில் பட்டா மாற்றுதல், முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட சமூக பாதுகாப்பு திட்டங்கள் வருவாய் துறை மூலம் வழங்கப்படும் சான்றிதழ்கள் தொடர்பான கோரிக்கைகள் மீது தீர்வு செய்யப்படும்.


மேலும் சென்னை மாநகராட்சி சுகாதாரத்துறை மூலம் மருத்துவ முகாம், கால்நடை மருத்துவ துறை மூலம் கால்நடைகளுக்கான மருத்துவ முகாம், குடும்ப அட்டை, குடிநீர் பிரச்சனைகள், நிலம் சம்பந்தமான பிரச்சனைகள் குறித்த கோரிக்கைகள் குறித்தும் நடவடிக்கை எடுக்கப்படும்.


எனவே, இம்முகாமில் பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை நேரில் அளித்து பயனடையுமாறு சென்னை ஆணையர் தரப்பில் கேட்டுக்கொள்ளப் பட்டுள்ளது


சிறப்பு முகாம் நடைப்பெறும் இடங்கள்...


வட்டம் இடம் மனு அளிக்க வேண்டிய கோட்டத்தை சார்ந்த மக்கள்
மாம்பலம் ராணி அண்ணா நகர் குடியிருப்பு நலவாழ்வு சங்கம், கே கே நகர், சென்னை 78 (விருகம்பாக்கம் சட்டமன்றத்தொகுதி) கோட்டம் 131, மண்டலம் 10, வருவாய் ஆய்வாளர் 2.
மயிலாப்பூர் பெருநகர சென்னை மாநகராட்சி சமூக நலக்கூடம் முத்தையா தெரு, தேனாம்பேட்டை, சென்னை 18, (ஆயிரம்விளக்கு சட்டமன்றத்தொகுதி) கோட்டம் 118, மண்டலம் 9, வருவாய் ஆய்வாளர் 3.
தண்டையார் பேட்டை பெருநகர சென்னை மாநகராட்சி இளநிலை பொறியாளர் அலுவலகம் ரத்தின சபாபதி தெரு, பழைய வண்ணாரப்பேட்டை, சென்னை 21 (ஆர்.கே.நகர் சட்டமன்றத்தொகுதி) கோட்டம் 42, மண்டலம் 4, வருவாய் ஆய்வாளர் 3.
பெரம்பூர் பெருநகர சென்னை மாநகராட்சி சமூதாய நலக்கூடம் சத்திய மூர்த்தி நகர், வியாசர்பாடி சென்னை 39 (பெரம்பூர் சட்டமன்றத்தொகுதி)  கோட்டம் 37, மண்டலம் 4, வருவாய் ஆய்வாளர் 2. 
எழும்பூர் பெருநகர சென்னை மாநகராட்சி இளநிலை பொறியாளர் அலுவலகம் எண் 4, கோயில் தெரு கீழ்பாக்கம், சென்னை 10 (அண்ணா நகர் சட்டமன்றத்தொகுதி)  கோட்டம் 103, மண்டலம் 8, வருவாய் ஆய்வாளர் 1.