புதுச்சேரி: புதுச்சேரியில் ஒருவருக்கு தெரியாமல் ஒருவராக 5 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து மோசடியில் ஈடுபட்ட கல்யாண மன்னன் மீது காவல்நிலையத்தில் பாதிக்கப்பட்ட 4 மனைவி பெண் குழந்தையுடன் வந்து கண்ணீருடன் புகார் அளித்துள்ளார். புகாரில் சிக்கியுள்ள கல்யாண மன்னன் அரியாங்குப்பத்தை சேர்ந்த சீனு என்கிற தெய்வநாயகன். இவர் கடலூர் மாவட்டம் மேலுகுப்பம்பிள்ளையார் கோவில் பகுதியை சேர்ந்த காயத்ரியை முறைப்படி திருமணம் செய்து கொண்டார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கொரோனா ஊரடங்கு காலத்தில் இவரகள் திருமணம் நடைபெற்றதால் வரவேற்பு நிகழ்ச்சி வைக்கவில்லை. இந்நிலையில் காயத்ரிக்கு வரதட்சனையாக 6 பவுன் நகை மற்றும் இருசக்கர வாகனம், பீரோ, கட்டில் வழங்கப்பட்டது. 3 மாதம் குடும்பம் நடத்திய தெய்வநாயகன் மனைவியிடம் அதிக பணம் கேட்டு தொல்லை கொடுத்ததால் காயத்ரியை அவரது தாயார் அழைத்து சென்றுவிட்டார். அப்போது 3 மாத கர்ப்பினியாக இருந்த காயத்ரியை கணவன் தெய்வநாயகன் வந்து பார்க்கவில்லை.


மேலும் படிக்க | மதுரை திருமலை நாயக்கர் மகாலில் குறும்படங்கள், போட்டோ சூட் எடுக்க நிரந்தர தடை: ASI


இதனால் சந்தேகம் அடைந்த காயத்ரி கணவரை குறித்து விசாரித்த போதுதான் அவர் ஏற்கனவே 5 திருமணங்கள் செய்த கல்யாண மோசடி மன்னன் என்ற திடுக்கிடும் தகவல் தெரியவந்தது. முதல் மனைவி அனிதா, இரண்டாவது மனைவி தேவி, மூன்றாவது மனைவி கனகவள்ளி ஆகியோரை திருமணம் செய்து கொண்டது தெரியவந்திருக்கிறது. முதல் மனைவியான அனிதா என்கிற இந்திரகுமாரி என்பவருக்கும் தனக்கும் திருமணம் ஆகி பிரிவு ஏற்பட்டு விவாகரத்து பெறப்பட்டது என்று கூறி திருமணம் செய்துள்ளார்.


ஆனால் இருவருக்கும் விவாகரத்து ஆக வில்லை. தொடர்ந்து 5 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்தது குறித்து காயத்ரி கேட்ட போது அடியாட்களை வைத்து அடிக்கவும், கொலை செய்யவும் முயன்றதாக தெய்வநாயகன் மீது காயத்ரி குற்றம் சாட்டியுள்ளார். கயத்ரி பிரசவத்திற்காக புதுச்சேரி மருத்துவனையில் அனுமதிக்கபட்ட போது ஐந்தாவதாக தெய்வநாயகன் திருமணம் செய்துள்ளது தெரியவந்திருக்கிறது.


மேலும் திருமண மோசடி புகார் தொடர்பாக சீனுவிடம் கேட்டதற்கு அடியாட்களை வைத்து கொலை செய்து விடுவதாக மிரட்டுவதாக கூறியுள்ளார். இந்த நிலையில் தனக்கு ஏற்பட்டது போல் மற்ற பெண்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக காவல்நிலையத்தில் புகார் செய்திருப்பதாக காயத்ரி தெரிவித்துள்ளார். திருமண மோசடி புகார் தொடர்பாக சீனுவை அழைத்து விசாரிக்க புதுச்சேரி போலீசார் திட்டமிட்டுள்ளனர்.


மேலும் படிக்க | ஆந்திர முன்னாள் முதல்வர் என்.டி.ஆர் மகள் காலமானார்: தற்கொலையா? தொடர்கிறது விசாரணை


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ