கள்ளக்குறிச்சி அருகே பிளஸ் 2 மாணவி மர்மமான முறையில் மரணமடைந்ததை அடுத்து பல வித போராட்டங்கள் நடந்த வண்ணம் உள்ளன. பள்ளி மாணவியின் இறப்புக்கு நியாயம் கேட்டு அமைதியாக துவங்கிய போராட்டம், பின்னர் வன்முறை போராட்டமாக மாறிப்போனது. இதை அடுத்து காவல்துறை நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்து இது குறித்த விசாரணைகள் நடந்து வருகின்றன. இதற்கிடையில் உயிரிழந்த கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி விவகாரத்தை சிபிஐக்கு மாற்றக் கோரி அவரது வீட்டில் கட்டப்பட்ட பேனரால் பரபரப்பு ஏற்பட்டது.
கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்த மாணவி மூன்றாவது மாடியில் இருந்து உயிரிழந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரிய அதிர்வல்களை ஏற்படுத்தி வருகிறது. மாணவியின் மரணத்தில் மர்மம் இருப்பதாக தாய் மற்றும் உறவினர்கள் தொடர்ந்து பல கட்ட போராட்டங்களை நடத்தி வரும் நிலையில் நீதிமன்ற அறிவுறுத்தலின் பேரில் மறு பிரேத பரிசோதனை ஆனது நேற்று முன்தினம் நடைபெற்று முடிந்தது.
இது தொடர்பாக மாணவியின் வீட்டில் இரண்டு முறை நோட்டீஸ் ஒட்டப்பட்ட நிலையில் இன்று அவரது உடல் சொந்த ஊரான பெரிய நெசனூர் கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் குடும்பத்தினர் இறுதிச் சடங்குக்கான ஏற்பாடுகளை செய்தனர்.
மேலும் படிக்க | இன்னும் மாணவியின் உடலை பெற்றோர் பெற்று கொள்ளவில்லை -தமிழக அரசு
இந்த நிலையில் காவல்துறை தரப்பில் உடலைப் பெற்றுக் கொள்ள உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மனு நாளை விசாரணைக்கு வரும் நிலையில் மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் வீட்டிற்கு வந்து பார்வையிட்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த ஸ்ரீதர் வாண்டையார் உயிரிழ்ந்த மாணவியின் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடும் தாய்க்கு அரசு வேலையும் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
தனியார் பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரத்தில் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் வீட்டில் சிபிஐ விசாரணை வேண்டுமென குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் பேனர் கட்டியதால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் இறந்த மாணவியின் சொந்த ஊரில் மூன்றாவது நாளாக பலத்த போலீஸ் பாதுகாப்பானது போடப்பட்டுள்ளது. நாளை அவரது உடல் சொந்த ஊர் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க | கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பாக வெளியான பகீர் தகவல்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ