மயிலாடுதுறை அருகே சோழம்பேட்டை கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயிலின் பின்புறம் உள்ள குறுகிய சந்தின் இரண்டு பக்கமும் இரண்டு குட்டைகள் உள்ளன. இந்த இரண்டு குட்டைகளிலும் மூட்டை மூட்டையாக ரேஷன் அரிசி (rationshop)கொட்டப்பட்டிருப்பதாக அப்பகுதி மக்கள் மயிலாடுதுறை வட்ட வழங்கல் அலுவலருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, அங்கு வந்த வட்ட வழங்கல் அலுவலர் முருகேசன் மற்றும் துறை அலுவலர்கள் குட்டை நீரில் கொட்டப்பட்டிருந்த  அரிசியை ஆய்வு செய்தனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


ஆய்வில், 10க்கும் மேற்பட்ட மூட்டைகள் குட்டை கரையிலும், பலமூட்டைகள் குட்டையில் வீசப்பட்டுள்ளதும் தெரியவந்தது. மூட்டைகள் பிரிக்கப்பட்டும் குட்டையில் கொட்டப்பட்டிருந்தது. இதையடுத்து, குட்டையில் கொட்டப்பட்டிருந்த அரிசியின் மாதிரியை ஆய்வுக்காக அதிகாரிகள் சேகரித்தனர். அரிசி தண்ணீரில் ஊரியிருப்பதால் எந்தரக அரிசி என்று தெரியவில்லை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று வட்டவழங்கல் அலுவலர் முருகேசன் தெரிவித்தார். 



முன்னதாக அங்கு வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் பி.சீனிவாசன் மற்றும் அக்கட்சியினர் கூறுகையில், கிட்டதட்ட 50 மூட்டைகள்  ரேசன் அரிசி கொட்டப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டினர், ரேசன் அரிசிகளை கொட்டி சென்றவர்கள் மீது உறிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினர்.


 



ALSO READ | Corona Curfew: நள்ளிரவு ஊரடங்கு அமல் விதிமுறைகள் மீறல்! போலீசார் எச்சரிக்கை!!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR