கூவத்தூர் ரிசார்ட்டில் 500 அதிரப்படையினர்; பழனிச்சாமி கைது?
கூவத்தூர் ரிசார்ட்டில் 500 அதிரப்படையினர் நுழைந்தனர். 3 மணிக்குள் ரிசார்ட்டிலிருந்து அனைவரும் வெளியேற வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது
கூவத்தூர் ரிசார்ட்டில் எம்எல்ஏக்கள் கடத்தி வைக்கப்பட்டுள்ளதாக எம்எல்ஏ சரவணன் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் மற்றும் அதிரடிப்படையினர் அதிரடியாக உள்ளே நுழைந்துள்ளதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
அதிமுக எம்எல்ஏக்கள் 8-வது நாளாக கூவத்தூர் ரிசார்ட்டில் கடத்தி அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து மாறுவேடத்தில் தப்பி வந்த எம்எல்ஏ சரவணன் புகார் அளித்தார். இதைத்தொடர்ந்து போலீசார் அதிரடியாக உள்ளே நுழைந்தனர். கூவத்தூர் ரிசார்ட்டில் விசாரணை நடத்திய போலீசாருடன் எம்.எல்.ஏ.க்கள் வாக்குவாதம் செய்தனர்.
மேலும் எம்.எல்.ஏ.க்கள் கடத்தல் தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். எடப்பாடி பழனிச்சாமியை போலீஸ் கைது செய்யலாம் என்பதால் கூவத்தூரில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. அங்கு 500 அதிரப்படையினரும் உள்ளே நுழைந்துள்ளதால் பதற்றம் நிலவி வருகிறது. கூவத்தூர் ரிசார்ட்டை சுற்றிலும் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது
3 மணிக்குள் ரிசார்ட்டிலிருந்து அனைவரும் வெளியேற வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என தெரிகிறது.