இந்தாண்டு தமிழகத்தில் நீட் தேர்வு எழுத 550 மையங்கள் தயார் நிலையில் இருப்பதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளி விழாவில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது,


“நீட் தேர்விற்கு 16,000 மாணவர்கள் 413 மையங்களில் பயிற்சி பெற்று வருகின்றனர். இவர்களில் முதல் மதிப்பெண் எடுக்கும் 4,000 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு உணவு உள்ளிட்ட வசதிகளுடன் 10 கல்லூரிகளில் 25 நாள்கள் சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. கடந்த ஆண்டைப் போன்று இந்த ஆண்டு தமிழகத்துக்கு உள்ளேயே அனைத்து மாணவர்களும் தேர்வு எழுதும் வகையில் ஏற்பாடுகளைச் செய்து வருகிறோம். 


மத்திய அரசு கேட்ட உள்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய 550 மையங்கள் தயார்நிலையில் உள்ளன. எனவே ஒரு மாணவர் கூட வெளிமாநிலங்களுக்குச் சென்று தேர்வு எழுதும் நிலை ஏற்படாது. என தெரிவித்துள்ளார்.