5 மற்றும் 8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து மாணவர்கள் மற்றும் பெற்றோர் அச்சமடைய வேண்டாம் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அறிஞர் அண்ணாவின் 51-வது நினைவு நாளை முன்னிட்டு சென்னை அடையாறில் உள்ள அனந்தபத்மநாப சுவாமி கோவிலில் நடைபெற்ற சமபந்தி விருந்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டார். அப்போது  பேசிய அவர்.,


5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு மையங்கள் அவரவர் பள்ளியிலேயே அமைக்கப்படும். தேர்வுப் பணியில் வெவ்வேறு பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள். 


இந்த தேர்வானது மாணவர்களின் கற்றல் திறனை மதிப்பிடவும், ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை மதிப்பிடவும் மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும் மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு வீண் அச்சம் தேவையில்லை என்றும் செங்கோட்டையன் கூறினார்.