5வது டெஸ்ட்: கருண் நாயர் முச்சதம்; இந்திய அணி 759/7
இங்கிலாந்துக்கு எதிரான சென்னை டெஸ்டில் இளம் இந்திய வீரர் கருண் நாயர் அபாரமாக ஆடி முதல் முச்சதம் அடித்துள்ளார்.
சென்னை: இங்கிலாந்துக்கு எதிரான சென்னை டெஸ்டில் இளம் இந்திய வீரர் கருண் நாயர் அபாரமாக ஆடி முதல் முச்சதம் அடித்துள்ளார்.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல், நான்கு போட்டிகள் முடிவில், இந்திய அணி 3 - 0 என தொடரை கைப்பற்றியது. ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து, 477 ரன்கள் எடுத்தது.
இந்திய அணி முதல் இன்னிங்சில் இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 60 ரன்கள் எடுத்திருந்தது. மூன்றாம் நாள் ஆட்டத்தில் ராகுல் 199 ரன்களில் அவுட் ஆனார். தனது இரட்டை சத வாய்ப்பை பறிகொடுத்து வெளியேறினார். மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 391 ரன்கள் எடுத்தது. கருண் நாயர் 71, முரளி விஜய் 17 அவுட்டாகாமல் இருந்தனர்.
இன்று நான்காம் நாள் தொடர்ந்து ஆடிய இந்திய அணி முரளி விஜய் 29 ரன்களில் அவுட் ஆனார். பிறகு ஆட வந்த அஸ்வின் தனது அரை சதத்தை பூர்த்து செய்து 67 ரன்களில் ஆட்டம் இழந்தார். கருண் நாயர் தொடர்ந்து நன்றாக ஆடி தனது முதல் இரட்டை சதத்தை பூர்த்தி செய்தார். இரட்டை சதம் அடித்த 3-வது இந்திய கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை கருண் நாயர் பெற்றார்.
இந்திய அணி 184.5 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 716 ரன்கள் சேர்த்துள்ளது. கருண் நாயர் 303 ரன்களிலும், உமேஷ் 1 ரன்களிலும் பேட் செய்து ஆட்டத்தை முடித்தனர் தற்போது இங்கிலாந்து அணி பேட்டிங் செய்து வருகின்றது.