Yoganasam Talents: காஞ்சிபுரத்தை சேர்ந்த மஹாமகரிஷி அறக்கட்டளை மஹாயோகம் என்ற அமைப்பு, யோகாசனம் மற்றும் ஆற்றல் மருத்துவம் என்ற மருத்துவ ரீதியான யோகா வழிமுறைகள் மற்றும் ஜென்ஸ்கர் குணப்படுத்தும் தற்காப்புகலையை வடிவமைத்து கற்றுக்கொடுத்து வருகிறது. இந்த அமைப்பு யோகாவில் 6 கின்னஸ் உலக சாதனையும், 5 தேசிய சாதனையும் புரிந்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த அறக்கட்டளை சார்பில் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோவில் பகுதியில் அனைவரின் ஆரோக்கியத்திற்கான உடல் நலம், மன நலம் அதன் அவசியம்,  குழந்ததைகளின் எதிர்காலம் பற்றிய விழிப்புணர்வு  மற்றும் பல்வேறு ஆசனங்களில்  கின்னஸ் தேசிய சாதனை படைத்தவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.


குருபாதம்  கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உயர்நீதி மன்ற நீதியரசர் சுவாமிநாதன், ஐஜி லலிதா லட்சுமி (IAS) ஆகியோர் கலந்த கொண்டு யோகாசனம் குறித்து விழிப்புணர்வு உரையாற்றினர். 


இந்நிகழ்ச்சியில்   162மணி நேரம் 31நிமிடம் 4 நொடி தூங்காமல் இடைவிடாமல் உணவு உட்கொள்ளாமல் பல்வேறு ஆசனங்களை செய்து கின்னஸ் சாதனை படைத்த ரஞ்சனா என்பவருக்கும், பல்வேறு ஆசனங்களை செய்தபடியே 138மணி நேரம் மாரத்தான் ஓடி  கின்னஸ் சாதனை படைத்த ஜெகதீசன் என்பவருக்கும் பாராட்டு விழா நடைபெற்றது. 


இதே போல் 2023ஆம் ஆண்டு உலக யோகா தினத்தை முன்னிட்டு ஜென்ஸ்கர் தற்காப்பு கலை மாணவர்கள் 854 மாணவர் கட்டாவுடன் கூடிய வீர பத்ராசன்னா முறைகளை ஒரு மணி நேரம் தொடர்ச்சியாக செய்து கோல்டன் புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸில் 2 சாதனைகளை படைத்தனர்.


இவர்களில் 30க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு கேடயம் வழங்கி பாராட்டினர். இந்த நிகழ்ச்சியில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பொதுமக்கள் முன்பு யோகாசனம், சிலம்பாட்டம், நின்ஜா சுற்றியது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.


ஆரோக்கியம் என்பது மிகப் பெரிய பிரச்சனையாகி விட்ட இன்றைய காலகட்டத்தில், குழந்தைகளுக்கு ஆரோக்கியத்திற்கான வழிமுறைகளை கற்றுக் கொடுத்து ஊக்குவிப்பது தான் நாம் அவர்களுக்கு செய்யும் நல்லது என்று சொல்லலாம். உடல் உழைப்பு குறைந்துவிட்ட இந்த நாட்களில் உடலில் விறைப்புதன்மை ஏற்படுவது இயல்பாகிவிடுகிறது.


உடல் சீர்கேடுகளை தவிர்க்க, தினசரி சில யோகாசனங்களை பயிற்சி செய்யலாம். அதேபோல. உடல் எடையை குறைக்க, யோகாசனங்கள் சிறந்த உத்திகளில் ஒன்றாக கருதப்படுகிறது. யோகாசனங்கள் கொழுப்பை மட்டும் எரிப்பதில்லை, நம் மனதிற்கு புத்துணர்ச்சி அளித்து தசைகளுக்கு வலுக்கூட்டி கலோரிகளை எரிக்க உதவுகிறது.


யோகாசனங்களின் நன்மைகளை வார்த்தைகளில் சொல்லி புரிய வைத்துவிட முடியாது. உணர்ந்து அனுபவித்தால் பலன் பெறலாம். இதை மாணவர்களுக்கு சொல்லிக் கொடுத்து உற்சாகப்படுத்துவது அனைவராலும் பாராட்டப்படுகிறது.


மேலும் படிக்க | தொடை கொழுப்பை எரிக்கும்... சில சூப்பர் யோகாசனங்கள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ