தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் 6 முக்கிய முடிவுகள்!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் 6 முக்கிய முடிவுகள் இன்று எடுக்கப்பட்டுள்ளன.
தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று முதல் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. காலை 11.30 மணிக்கு தொடங்கிய இந்த கூட்டம் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்றது. இதில் புதிய திட்ட பணிகள் ,மக்கள் நலப் பணிகள், கொரோனா பரவாமல் தடுக்க நடவடிக்கை உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அப்போது கொரோனா (Coronavirus) பரவலை கட்டுப்படுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (Tamil Nadu Cheif Minister MK Stalin) தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் 6 முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அவை,
ALSO READ | Oxygen Action: முதல்வர் ஸ்டாலினின் 'ஆக்ஷன்'.. மத்திய அரசின் 'ரியாக்ஷன்'
* அமைச்சர்கள் அனைவரும் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட மாவட்டங்களில் ஊரடங்கு முழுமையாக நடைமுறைப்படுத்தியதை உறுதி செய்ய வேண்டும்.
* அனைத்து மருத்துவமனைகளில் ஆக்சிஜன் முறையாக பயன்படுத்தப்படுவதை உறுதி செய்வது, ஆக்சிஜன் வீணாக்கப்படவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும்.
* மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு உடனடி சிகிச்சை அளிக்கப்படுவதை கண்காணிப்பது, மருத்துவமனை வசதிகள் மற்றும் நோயாளிகள், ஊழியர்களுக்கான உணவு வசதிகளை மேம்படுத்த வேண்டும் .
* அனைத்து மாவட்டங்களில் தடுப்பூசி பயன்பாட்டை உயர்த்தும் வகையில், மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
* மருத்துவத் துறை, வருவாய்த் துறை, காவல்துறை, நகர்ப்புற வளர்ச்சித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை இணைந்து பணியாற்றும் வகையில் ஆய்வுக்கூட்டங்களை நடத்தி உறுதி செய்ய வேண்டும்.
* சென்னை, கோயம்பத்தூர், திருச்சி, சேலம், மதுரை திருநெல்வேலி போன்ற இடங்களில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனையை கண்காணிப்பது, இவை கள்ளச்சந்தையில் விற்கப்படுவதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR