பட்டுக்கோட்டையை அடுத்த மல்லிப்பட்டினத்தைச் சேர்ந்தவர் நசுருதீன். இவருக்கு 6 மாதங்களுக்கு முன்பு பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. ஹஜீரா என பெயர் சூட்டிய அந்தக் குழந்தை நசுருதின் வீட்டின் பின்புறம் இருக்கும் மீன் தொட்டி ஒன்றில் சந்தேகத்திற்கு இடமாக மூழ்கி இறந்துள்ளது. இதனையடுத்து ஜமாத்தார்கள் மற்றும் உறவினர்கள் கலந்து பேசி குழந்தையின் உடலை மல்லிப்பட்டினம் பள்ளிவாசலில் அடக்கம் செய்துவிட்டனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ALSO READ | குடிநீர் வழங்க மறுத்த துரைமுருகனுக்கு நீர்வளத்துறை அமைச்சர் பதவியா? - எச். ராஜா


இந்த தகவல் அப்பகுதியைச் சேர்ந்த சுதாகர் என்பவருக்கு தெரியவந்துள்ளது. அவர், கிராம நிர்வாக அலுவலர் தங்கமுத்துவுக்கு தகவல் கொடுத்துள்ளார். பின்னர், கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த சோத்துப்பாக்கம் காவல்துறையினர், நசுருதின் குழந்தை இறப்பு குறித்து விசாரணையை தொடங்கியுள்ளனர். குழந்தை பிறந்து 6 மாதங்களே ஆவதால், வீட்டின் பின்புறத்துக்கு குழந்தை தனியாக செல்ல வாய்ப்பில்லை. மேலும், தண்ணீர் தொட்டிக்குள் விழுவதற்கும் மிகமிக சொற்ப வாய்ப்புகளே இருப்பதாக கருதும் காவல்துறை, இது குறித்து நசுருதீன் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் விசாரணை தொடங்கியுள்ளனர்.


குழந்தையின் இறப்புக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஜமாத் உறுப்பினர்களிடமும் காவல்துறையினர் விளக்கம் கேட்க உள்ளதாக கூறப்படுகிறது. 6 மாத குழந்தை தண்ணீர் தொட்டியில் மூழ்கி உயிரிழந்த செய்தி, அக்கம்பக்கத்தினருக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.


ALSO READ | மாரிதாசை போல் அண்ணாமலையை கைது செய்ய முடியுமா? சி.வி.சண்முகம்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR