தமிழக IPS அதிகாரிகள் 8 பேர் IG-க்களாக பதவி உயர்வு பெறுகின்றனர்!
தமிழக காவல்துறையின் 8 டிஐஜி-க்கள் ஐஜி-க்களாக பதவி உயர்வு பெறும் கோப்பு தயாராக உள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது!
தமிழக காவல்துறையின் 8 டிஐஜி-க்கள் ஐஜி-க்களாக பதவி உயர்வு பெறும் கோப்பு தயாராக உள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது!
உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்தவுடன் இவர்கள் விரைவில் பதவி உயர்வு பெறுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக காவல் துறையில் 2001-ஆம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரிகள் தற்போது டிஐஜி-க்களாக பணியாற்றி வருகின்றனர். இவர்கள் அனைவரும் ஐஜி-க்களாக பதவி உயர்வு பெற உள்ளனர்.
இதற்கான தமிழக அரசின் பரிந்துரை கோப்பு, மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும் அதிகாரிகளின் பதவி உயர்வுக்கு மத்திய அமைச்சத்திடம் இருந்து அனுமதிக்காக காத்திருக்கும் நிலையில் இம்மாத இறுதிக்குள் அதற்கான உத்தரவு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பதவி உயர்வுக்காக காத்திருக்கும் 2001 பேட்ச் ஐபிஎஸ் அதிகாரிகள் சீனியாரிட்டி அடிப்படையில் பின்வருமாறு...
டி. எஸ். அன்பு - இணை ஆணையர் மத்திய குற்றப்பிரிவு சென்னை காவல் ஆணையர் அலுவலகம்
பிரேமானந்த் சின்ஹா -இணை ஆணையர் சட்டம் ஒழுங்கு (வடக்கு) சென்னை
தீபக் தாமோர் - அயல்பணி சிபிஐ
செந்தில்குமார் - சேலம் சரக டிஐஜி
அனிசா உசேன் - அயல்பணி டெல்லி
நஜ்மல் ஹோடா - இணை ஆணையர் போக்குவரத்து (வடக்கு)
மகேந்திர குமார் ரத்தோட் - நெல்லை காவல் ஆணையர்
வனிதா - வேலூர் டிஐஜி
இம்மாத இறுதிக்குள் இவர்களுக்கான பதவி உயர்வு அனுமதி வரவுள்ளதாக காவல்துறை வட்டாரத்தில் தகவல் வெளியாகி வருகிறது.