இது தீத்தொண்டு வாரம். மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு இடங்களில் தீயை எப்படி கட்டுப்படுத்துவது, ஆபத்தைக் காலத்தில் எப்படி நடந்துகொள்வது போன்ற பல்வேறு செயல்களை மாணவர்கள் முன்னிலையிலும், பொதுமக்கள் முன்னிலையிலும் தீயணைப்பு வீரர்கள் செய்துகாட்டி வருகின்றனர். இதுவரை ஆபத்தின் உச்சத்தில் இருந்தவர்களை எப்படியெல்லாம் உயிரைக் கொடுத்து தீயணைப்பு வீரர்கள் மீட்டார்கள் என்ற விழிப்புணர்வு வீடியோவையும் தமிழ்நாடு தீயணைப்புத் துறை சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்நிலையில், கிணற்றில் தவறி விழும் உயிர்களை மீட்பது எப்போதும் தீயணைப்பு வீரர்களுக்கு சவாலான விஷயம்தான். ராசிபுரம் அருகே பல அடி ஆழம் உள்ள கிணற்றில் விழுந்த 85 வயது மூதாட்டியை எப்படி மீட்டார்கள் வீரர்கள்.?! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | என்னது சென்னையில் இப்படி ஒரு இடமா!


முதலில், நடந்த சம்பவம் என்ன ?  


நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள குள்ளப்ப நாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த ராமசாமி என்பவர் விவசாயம் செய்து வருகிறார். இவரது தாயார் பாவாய் (85). எப்போதும்போல் விவசாயத் தோட்டம் அருகே பாவாய் சென்றுகொண்டிருந்தார். அப்போது  எதிர்பாராதவிதமாக மூதாட்டி  கிணற்றில் தவறி விழுந்துள்ளார். இந்த ‘எதிர்பாராதவிதமாக’ என்பது எப்படி நிகழ்ந்தது என்று போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர். கிட்டத்தட்ட 100 அடிக்கும் மேல் ஆழம் கொண்ட கிணற்றில் இருந்து அலறல் சத்தம் கேட்ட பிறகுதான் அனைவருக்கும் மூதாட்டி பாவாய் கிணற்றில் விழுந்தது தெரியவந்தது. உடனடியாக கிணற்றுப் பக்கம் வந்த விவசாயி  ராமசாமி செய்வதறியாமல் ராசிபுரம்  தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தார். பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ராசிபுரம்  தீயணைப்புத் துறையினர் அரை மணி நேரம் போராடினர். கயிற்றை இடுப்பில் கட்டியபடி 85 வயதுள்ள மூதாட்டியை  தீயணைப்பு வீரர்கள் உயிருடன் பத்திரமாக மீட்டனர். ஆனாலும் மூதாட்டிக்கு  லேசான காயம் ஏற்பட்டது. அவரைச் சிகிச்சைகாக ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு வீரர்கள் கொண்டு சென்றனர். உரிய நேரத்தில் வெகுசீக்கிரத்தில் சம்பவ இடத்திற்கு வந்து, மூதாட்டியை உயிருடன் மீட்ட தீயணைப்பு துறையினரை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர். 


மேலும் படிக்க | பைக்கை திருட வந்த வாலிபர் கிணற்றில் விழுந்து பலி!


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR