கோடைக்காலம் வந்தாலே பல கிராமங்களிலும், நகரங்களிலும் மக்கள் கையில் தண்ணீர்க் குடங்களோடு நீண்ட வரிசையில் தண்ணீர்க்காகக் காத்துக்கொண்டு இருக்கிறார்கள். பல ஊர்களில் விவசாயம் செய்யக் கூடத் தண்ணீர் இல்லாமல் ஆறுகள், ஏரிகள், கிணறுகள், குட்டைகள் என எல்லா நீர்த்தேக்கமும் வறண்ட நிலையில் இருப்பதைப் பற்றிக் கேட்டு இருப்போம். இதுவரை இது எங்கோ கிராமங்களில் நடக்கும் பிரச்சனை இதற்கும் எனக்கும் சம்பந்தம் இல்லையென நகர்ப்புற மக்கள் பேசிவந்தார்கள். ஆனால் கடந்த சில காலமாக நம் தலைநகரமான சென்னையில் கூட மக்கள் தெரு தெருவா கையில் குடம் ஏந்தி தண்ணீர் வேண்டிப் போராடி வருகின்றனர். இப்படிப் பட்ட ஒரு சூழ்நிலையில் தண்ணீர் பற்றாக் குறையற்ற சென்னை இருந்தது என்று சொன்னால் நம்ப முடியுமா? ஆம், சில ஆண்டுகளுக்கு முன்பு மெட்ராஸ் மாகாணத்தில் வசித்த மக்களின் நீர் தேவையை எந்த ஒரு பற்றாக்குறையுமின்றி வெறும் ஏழு கிணறுகள் பூர்த்தி செய்தது.
மேலும் படிக்க | மாரத்தானில் ஓடிய டைப் 1 நீரிழிவு நோயாளிகள்..!
ஏழு கிணறுகள்
1639 முதல் 1770 வரையிலான காலகட்டத்தில் வாழ்ந்த சென்னை வாசிகள், தங்களது அன்றாட நீர் தேவைக்கு இயற்கை நீரோடைகள், ஆறுகள், தொட்டிகள், ஊரணிகள், ஏற்றுக் கிணறுகள் மற்றும் திறந்த கிணறுகள் போன்றவற்றிலிருந்து நுகர்வுக்கான நீரைப் பயன்படுத்தி வந்தார்கள். நீர் தேவையும் அதிகரித்தது, இதைக் கண்ட ஆங்கிலேயத் தளபதி "பேகரல்" 1772 ஆம் ஆண்டு தற்போதைய ஜார்ஜ் டவுனில் சென்னை மக்களின் நீர் தேவையைப் பூர்த்தி செய்ய 16 ஆடி விட்டதில் 23லிருந்து 29 ஆடி ஆழத்தில் பத்து கிணறுகளை வெட்டினார். அவற்றில் மூன்று கிணறுகளில் தண்ணீர் ஊற்று இல்லாததால் அவை கைவிடப்பட்டு மீதமுள்ள ஏழு கிணறுகளையே பயன்படுத்தினார்கள். அதனால் காலப்போக்கில் அந்த ஏழு கிணறுகள் ஏழு கிணற்றுத் தண்ணீர் சேவை என்று அழைக்கப்பட்டது.
பயன்பாட்டிலிருந்தபோது
இந்த ஏழு கிணறுகள் ஏழு ஆண்டுகாலமாக ஜார்ஜ் கோட்டையில் உள்ள 6000 பேர்களின் தண்ணீர் தேவையைத் தீர்த்துவைத்தது. பின்னர் 1782 ஆம் ஆண்டு இந்த ஏழு கிணறுகள் தண்ணீர் சேவையை அரசாங்கம் 10,500 ரூபாய் என விலை கொடுத்து வாங்கியது. அதற்குப் பின் அந்த ஏழு கிணற்றின் தண்ணீரைக் கோட்டைக்கும், ராணுவ மையங்களுக்கும், ப்ரெசிடெண்சி குடியிருப்புக் கட்டிடங்களுக்கு, ஆங்கிலேய அரசாங்கம் பயன்படுத்தியது. இந்த ஏழு கிணறுகள் கிட்டத்தட்ட ஒரு நுற்றாண்டுகாலமாகச் சென்னை வாழ் மக்களின் நீர்த்தேவையை அரவே ஒழித்தது. 1870 ஆம் ஆண்டு சென்னைக்கு தாமரப்பாக்கத்திலிருந்து தண்ணீர் கிடைத்தது, அதனால் இந்த ஏழு கிணறுகள் பராமரிப்பின்றி பயன்படாத பாழடைந்த நிலைமைக்குத் தள்ளப்பட்டது. தற்பொழுது இந்த ஏழு கிணறுகளில் ஒரு கிணறு மட்டும் ஜார்ஜ் டவுனில் உள்ளது.
மேலும் படிக்க | மீண்டும் குதிரைப் பந்தயம் : பரிசு எத்தனை லட்சம் தெரியுமா!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR