அ.தி.மு.க. அணிகள் இணைப்புக்குப் பிறகு டி.டி.வி தினகரன் தனது ஆதரவாளர்களுடன் தனித்து செயல்பட்டு வருகிறார். அத்துடன் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளரை தோற்கடித்து தனது செல்வாக்கை  காட்டியுள்ளார். இதையடுத்து, டிடிவி தினகரன் ஆதரவு நிர்வாகிகள் அடுத்தடுத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்தும், கட்சியில் இருந்தும் நீக்கப்பட்டு வருகின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதை தொடர்ந்து ஓ.பி.எஸ். வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது:- தர்மபுரி, புதுக்கோட்டை, திருப்பூர் மாவட்ட தினகரன் ஆதரவு நிர்வாகிகள் 150 க்கும் மேற்ட்டவர்கள் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டனர். 


நீக்கப்பட்டவர்களுடன் அதிமுகவினர் எந்த தொடர்பும் வைத்துக்கொள்ள கூடாது என்று ஓபிஎஸ் - ஈபிஎஸ் அறிவித்துள்ளனர். 


இதுவரை 200க்கும் மேற்பட்ட தினகரன் ஆதரவாளர்கள் கடசியில் இருந்து நீக்கபட்டு உள்ளனர்.


தற்போது தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் 9 பேர், கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி கூட்டாக இந்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளனர்.


டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் கோதண்டபாணி, ஜெயந்தி பத்மநாபன், கலைச்செல்வன், கதிர்காமு, எஸ்.ஜி.சுப்பிரமணியன், மாரியப்பன், கென்னடி, எஸ்.முத்தையா, ஆர்.சுந்தரராஜ் ஆகிய 9 பேர் அதிமுக பொறுப்பிலிருந்து நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.